Ad Widget

நவீல்ட் பாடசாலை பாலியல் குற்றச்சாட்டு : சைகை சாட்சியங்களை பதிவு செய்வதில் தாமதம்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான நவீல்ட் பாடசாலை அதிபருக்கு எதிரான சாட்சியங்கள், வாய்பேச முடியாதவர்களாக இருப்பதால், அவர்களுடைய சாட்சி பதிவு செய்வதற்கு சைகை மொழிபெயர்பாளர் ஒருவருரை பெறுவதில் தாமதம் உள்ளதாக சாவகச்சேரி பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

வெகுவிரைவில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு பூரணமான அறிக்கையினை சமர்பிக்குமாறும், வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் எனவும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பா.சுப்பிரமணியம் இதன்போது உத்தரவிட்டார்.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான நவீல்ட் பாடசாலை அதிபருக்கு எதிரான வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (15) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அதிபருக்கு பிணை வழங்குமாறு அவர் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி கோரிநின்றார்.

அதிபர் தொடர்பான விசாரணைகள் முடிவடையாமையால், அவரைப் பிணையில் செல்வதற்கு சாவகச்சேரி பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதனையடுத்து, அதிபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts