- Friday
- May 15th, 2026
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றாமல் தனிச் சிங்கள நாட்டை உருவாக்க நினைத்தால் தமிழர் தேசத்தில் தமிழீழம் என்ற தனி இராஜ்ஜியம் உருவாக அது வழிசமைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு இன்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் தாண்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் பாரதூரமானதாக அமைந்துள்ளன என்று அமைச்சரவை பிரதிப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பரணமக ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை...
வெள்ளைக் கொடி விவகாரம் பொய் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகைளை மேற்கொள்ளும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி திவயின இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரிடம் சரணடைந்த எவரும் வெள்ளைக் கொடியுடன் வரவில்லை என...
60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கொடிகாமம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வசமிருந்து 30 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இந்தியாவின் - இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இவற்றை நாட்டுக்குள் கொண்டுவந்து வல்வெட்டித்துறை...
வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே இதனைத்...
இந்திய மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும்விட அதிக அளவு அதிகாரங்களை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவதற்கேற்ற வகையில்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் பிரேரிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முன்னாள் இந்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமாகிய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற் கொண்டு கொழும்புக்கு வருகை தந்திருந்த சிதம்பரம், நேற்று புதனன்று...
தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று மண்ணுக்குள் புதையுண்டுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 40 அடி...
போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், இறுதிப் போரின்போது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் என்பன தொடர்பில் விசாரணை செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நாம் வரவேற்கிறோம். என்று தமிழ்த்...
அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுமதிப் பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்றதாக, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய லொறியை விடுவிக்கவே இவர் இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார். இதன்படி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு சந்தேகபர் 6000 ரூபா இலஞ்சமாக கொடுக்க...
இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்திய அமைதிப்படையினர் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் உட்புகுந்து மேற்கொண்ட துப்பாக்கி...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பரந்தன் சிவபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அன்னாரின் பூதடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இதில்...
இலங்கை யுத்தம் முடிந்த நிலையில், பிரபாகரன் இறந்து விட்டதாக காட்டப்பட்ட உடல் உண்மையில் அவருடையது இல்லை என்றும், பிரபாகரன் உயியோடு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும், இந்திய ரா முன்னாள் அதிகாரியும், கடற்படை அதிகாரியுமான கார்கில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது அவர் பிரபாகரனைப் பற்றி பரபரப்பான தகவல்களை அளித்தார். அதில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளி ஒருவர் திடீரெ மரணித்துள்ளமை குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தயாரான 29 வயதான சசிதரன் தாரிகா என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துப் பிரிவு முன்னாள் போராளியாவார். இறுதி யுத்தத்தில் பலத்த காயமடைந்த நிலையில் வாழ்ந்து வந்த...
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நேற்று (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வினை மாவட்ட செயலகத்தில் வைத்து மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் ஆரம்பித்து வைத்தார். புகையிலை மது மற்றும் ஏனைய போதைப் பொருள் பாவனைகளினால் ஏற்படும் விளைவுகளை...
குறித்த நிறுவனம் சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி, வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனால் குறித்த நிறுவனம் கொழும்பில் இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையக அதிகாரிகளால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவை கைபற்றப்பட்டதுடன் அலுவலகத்தில் இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரும் கைது...
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதி மக்கள் மின்சாரவசதி இன்றி பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளனர். 333 குடும்பங்கள் மீள்குடியேற பதிவு செய்துள்ள நிலையில் 64 குடும்பங்கள் நிரந்தமாக குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தாம் மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட் வில்லை என...
மருதனார் மடம் ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் வீட்டில் 18ஆம் திகதி இரவு வாள்களுடன் நுழைந்த கும்பலொன்று, வீட்டிலிருந்துவர்களை மிரட்டி 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதென சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். நள்ளிரவு வேளையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், நகை மற்றும் பொருட்களை இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில், குருக்கள்...
இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள்...
சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டபோது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தனர் என சந்தேகநபர்கள் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீலால் தன்தெனிய தெரிவித்தார். ரவிராஜ் கொலை சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட...
இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில், பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இம் மாத ஆரம்பத்தில், வீடமைப்புத் திட்ட பயனாளியான கணவனை இழந்த பெண்...
Loading posts...
All posts loaded
No more posts
