தமிழினி மறைவுக்கு கருணாநிதி இரங்கள்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:– இலங்கையில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து, அதன் அரசியல் பிரிவு மகளிர் அணியின் பொறுப்பாளராக செயல்பட்ட போராளி தமிழினி, புற்றுநோய்க் கொடுமைக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்து விட்டார் என்று செய்தி...

யாழில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது

நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் மூன்று வயது மகனுடன் விளையாடச் சென்ற பக்கத்து வீட்டு சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைக்...
Ad Widget

தமிழினி அவர்களது புகழுடலுக்கு ஸ்ரீஞானேஸ்வரன் , அண்ணாத்துரை அஞ்சலி ( இறுதிஊர்வல படங்கள் இணைப்பு)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட தலைவர் திரு ஸ்ரீஞானேஸ்வரன் திருமதி சிறீஞானேஸ்வரன் மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரசார பொறுப்பாளர் திரு அண்ணாத்துரை ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். நேற்று காலை பரந்தன் சிவபுரத்தில் தமிழினி அவர்களது புகழுடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் இறுதி நிகழ்விலும் பங்குபற்றியிருந்தனர். இறுதி...

பெண் தலைமைத்துவத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தமிழினி – முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

உணர்வும் அறிவும் ஆளுமையுங் கொண்ட ஒரு ஜீவன் எம்மை விட்டு ஏகிவிட்டது. புற்றுநோய்த் தாக்கத்தினால் உயிர்துறந்த சகோதரி தமிழினி அவர்களின் அகால மரணம் தமிழ் மண்ணின் ஒரு பேரிழப்பாகும். என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சகோதரி தமிழினி அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராகச்...

சனல்-4 வீடியோக்களில் உண்மைத் தன்மை உண்டு

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில், பிரிட்டனைச் சேர்ந்த "சனல்-4' தொலைக்காட்சி வெளியிட்ட, "நோபயர் சூன்' (போர் தவிர்ப்பு வலயம்) ஆவணப்படத்தில் காணப்படும் காட்சிகளில் உண்மைத்தன்மை இருக்கலாம் என்று மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. போரின்போது காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால...

போர்க்குற்றவாளிகளுக்கு உள்நாட்டு சட்டக்கட்டமைப்பின் கீழ் தண்டனை!

இறுதிக்கட்டச் சமரின்போது போர்விதிகளை மீறிய படையினருக்கு எதிராக உள்ளக சட்டக்கட்டமைப்பின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இறுதிப்போரின் போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை...

வடபகுதியில் காணாமல்போன ஊடகவியாளர்கள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மறைந்த சிரேஷ்ட ஊடகவியாளர் ம. நிமலராஜன் அவர்களின் 15 ஆவது ஆண்டின் நினைவு தின நிகழ்வுகள் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்கள், நிமலராஜனின் ஊடக உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது, வடபகுதியில் கொலை செய்யப்பட்ட, மற்றும் காணாமல் போன ஊடகவியாளர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என...

தமிழகத்தில் கரை ஒதுங்கிய படகில் சென்றவர்கள் இலங்கை அகதிகளா?

இராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இலங்கை தலைமன்னாரை சேர்ந்த பைபர்கிளாஸ் படகு ஒன்று, கடந்த சில நாட்களுக்கு முன் கரை ஒதுங்கியது. இந்த படகில் ஆட்கள் யாரும் வந்தார்களா என்பது குறித்து, இந்தியப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழக மரைன் பொலிஸ் ஏடிஜிபி சைலேந்திரபாபு, நேற்று இராமேஸ்வரம் சென்றார். சங்குமால்...

67 தமிழ் அரசியல் கைதிகள் இவ்வார இறுதிக்குள் விடுதலை?

விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 67 தமிழ் அரசியல் கைதிகளை இவ்வார இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, இதுவரை காலமும் வழக்குத்தாக்கல் செய்யப்படாமல் எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளையே இந்த வாரம் விடுவிக்க ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் குறித்தும் விசாரணையை...

“பாலியல் தொழிலுக்கு, அங்கீகாரம் வழங்குங்கள்”

பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பு என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தமது தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையிலான ஊடக சந்திப்பு (கொழும்பு) ஒன்றில் அவர்கள் நேற்று (19) தமது கோரிக்கையை முன்வைத்தனர். குறித்த அமைப்பின் இணை தலைவரான பி...

சமூக வலை­த்த­ளங்­களில் தனிநபரை, இழி­வு­ப­டுத்தும் பதி­வேற்­றங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­ம்

சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழி­வு­ப­டுத்தும் வகை­யி­லான பதி­வேற்­றங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­மொன்றை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மேலும் வழக்­கு­களின் கால­தா­மதத்தை குறைப்­ப­தற்கு விசேட நட­வ­டிக்­கை­களை அரசு முன்­னெ­டுக்­க­வுள்­ளது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். நீதி அமைச்சில் நேற்று (19) இடம்­பெற்ற சட்டம் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுக்­க ளின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான...

முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதனா விசாரணை : “இந்த செயற்பாட்டை நினைத்து, நான் வருந்துகின்றேன்” – ஜனாதிபதி

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய படைத் தளபதிகள் அண்மையில் பாரிய, மோசடிகள் குறித்த விசாரிக்கப்பட்டது குறித்து, மைத்திரிபால சிறிசேன அதிருப்தி தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட, முன்னாள் கடற்படைத் தளபதிகள் அட்மிரல் திசார சமரசிங்க, அட்மிரல் வசந்த கரன்னகொட, முன்னாள்...

தமிழினிக்கு கஜேந்திரன் அஞ்சலி

தமிழ் மக்களின் விடிவுக்காக சுமார் இரண்டு தசாப்தங்களாக போராடி இன்று மீளாத்துயிலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளராகவிருந்த தமிழினி அவர்களது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அஞ்சலி செலுத்தினர். பரந்தன் சிவபுரத்தில் உள்ள தமிழினி அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

வடக்கு மாகாண பொதுசேவையில் விண்ணப்பம் கோரல்

வடக்கு மாகாண பொதுசேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படும் இறுதி திகதி 16/11/2015 இது தொடர்பிலான அறிவித்தலை முழுமையாக பார்வையிடுவதற்கு

யாழ். நலன்புரி நிலைய மக்களுக்கு உலருணவு வழங்க வேண்டும்

யாழ். மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த 4,737 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் பல வருடங்களாக தங்களது சொந்த இடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் வாழ்ந்து வருவதால் இவர்களுக்கான உலருணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீள் குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்...

இந்த நான்கு கொலைகளையும் கிண்டி எடுக்கவும்: பிரதமருக்கு சங்கரி கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், ரி.மகேஸ்வரன், ரி.எம்.தசநாயக்கா ஆகியோரின் படுகொலைகள் சம்பந்தமான விபரங்களை தந்து உதவுமாறு சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் தங்களை வேண்டியுள்ளதாக அறிகின்றேன். இதே காலத்தில்தான் தங்கத்துரை, கிங்ஸ்லி ராஜநாயகம், லக்ஸ்மன் கதிர்காமர் மற்றும் ஆகியோரின் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. தயவு செய்து இவர்களின் விபரங்களையும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றிய செயலாளர் நாயகத்துக்கு...

தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய சிக்கல்

பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவால், தமிழக பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆசிரியர்களாக வேலை பார்க்கும் 5 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) உத்தரவின்படி, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் வழிமுறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தது....

மைத்திரிபால சிறிசேன மீது தற்கொலைத் தாக்குதல் : பிள்ளையானின் அதிர்ச்சித் தகவல்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம்...

தமிழினியின் பூதவுடலுக்கு மாவை அஞ்சலி!

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினியின் பூதவுடலுக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அஞ்சலி செலுத்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த தமிழினியின் பூதவுடல் கிளிநொச்சி பரந்தனிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுச் செல்லபட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவை...

இறுதிப்போரில் இழப்புக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாம் – ரணில்

போரின் இறுதி மாதத்தில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கலாம் என சில மதிப்பீடுகள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இறந்தவர்கள் தொடர்பான உறுதியான கணிப்பீடுகள் கிடைத்திருக்கவில்லை எனவும் நினைத்ததிலும் பார்க்க குறைவான மரணங்களே இடம்பெற்றிருக்கக்கூடுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ' ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போதே...
Loading posts...

All posts loaded

No more posts