- Friday
- November 21st, 2025
தமது நிலை குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களுக்கு தமிழ் அரசியல் கைதிகள் அவசர கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளனர். நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாம் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டமை தொடர்பிலும், தமது விடுதலை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
வேலணையில் பாடசாலை மாணவியை மோதிக் கொன்ற கடற்படையினரின் வாகனச்சாரதியை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெலின்குமார் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி வேலணைப் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கடற்படையினரின் வாகனம் மோதியதில்...
வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் நிபுணர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையானது தெளிவாக வெளியிடப்படவேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் கைதடியில்...
தொல்லியல் பாதுகாப்பு இடமான திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சகல கட்டுமானங்களையும், உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநிறுத்துமாறு, கோணேஸ்வரம் கோவிலின் நிர்வாக சபைக்குப் பணித்துள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ், இந்தப் பாதுகாப்பு இடத்தில், 372 ஏக்கர் அடங்குகின்றது என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில், தொல்பொருளியல் திணைக்களத்தின்...
கொழும்பு-10 இல் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு, அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று வியாழக்கிழமை(17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த திணைக்களத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேள்வியெழுப்பியபோதே அமைச்சர் நாவின்ன இவ்விடயத்தைத் தெரிவித்தார். குடிவரவு...
2015 ஜனாதிபதித் தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாய்மொழிமூல மற்றும் எழுத்துமூல வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசின் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போய்விட்டன எனக் குறிப்பிட்டு அரசியல் மேடைகள், நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்களில் பல்வேறு அறிக்கைகளை விட்டு அரசு விழுகின்ற வரை நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு தான் அரசியல்...
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட அலுவலகத்தினால் நடாத்தப்படும் முத்தான வியர்வை வர்த்தகக் கண்காட்சி நாளை (19) மற்றும் நாளை மறுதினம்(20) யாழ் மானிப்பாய் இந்து கல்லூரியில் இடம்பெறவுள்ளது. வாழ்வின் எழுச்சித் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் க.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கலந்துகொள்வதுடன் சிறப்பு விருந்தினராக...
தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடக்கு மாகாண சபையினால், திரட்டப்படும் நிவாரண நிதி உதவியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத் துயருக்கான உதவிகளை இந்திய அரசாங்கம் வெளிநாடுகளிடம் கோரவில்லை என்றும், இதனால் இந்த உதவிகளைத் தமது பணியகத்தினால் பெற முடியாதிருப்பதாகவும், இந்தியத் துணைத்...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுறேுகள் இம்மதம் 31ம் திகதிக்கு முன்னர் வௌியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இறுதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இம்மாதம் 28ம் திகதி...
விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் 17.12.2015 அன்று தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை. கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே, மதிப்புக்குரிய செயலாளர்களே, திணைக்கள அதிகாரிகளே உங்கள் அனைவருக்கும்,எங்கள் எல்லோரையும் இயக்குவித்துக் கொண்டிருக்கும்...
இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தில் இந்தியா கவனம் செலுத்தியிருப்பதாக, இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை தலைவழிப்பாதை வழியாக இணைக்கும் திட்டங்களை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது. பங்களாதேஸ், பூட்டான், நேபாளம் ஆகிய...
இராணுவத்தினர் இங்கு சும்மா தானே இருக்கின்றனர் எனவே அவர்களைக் கொண்டு, அவர்கள் அடைத்த வெள்ளவாய்க்கால்களையும்- கான்களையும் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பில் அவர்களுடன் பேச வேண்டும் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன். வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அமைச்சு மீதான விவாதம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இறுதியில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே...
காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற 6 அமர்வுகளில் 1,620 பேர் அழைக்கப்பட்டு அவர்களில் 993 பேர் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்துக்கான அமர்வுகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடைபெற்று நேற்று புதன்கிழமையுடன்...
தனியார் ஊழியர்கள் 8 மணித்தியாலங்கள் பணியாற்றுவதைப் போல, வட மாகாண சபையின் கீழுள்ள அரசாங்க ஊழியர்களும் 8 மணித்தியாலங்கள் பணியாற்றுவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்த வேண்டும். சில உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரிகள் தமது பணியின் இடைநடுவில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அளவுக்கு நிலைமையுள்ளதாக வட மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்....
இராணுவத்தினரால் காலில் சுட்டுக் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் தொடர்பில் ஒரு கோப்பை வைத்திருந்த சுன்னாகம் பொலிஸார், அதில் ஒட்டப்பட்டிருந்த எனது மகனின் புகைப்படத்தில் நெற்றியில் சிவப்பு கலரில் பொட்டு வைத்திருந்தனர். ஏன் பொட்டு வைத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது, அது உனக்குத் தேவையில்லாத விடயம் எனக் கூறி என்னை அங்கிருந்து துரத்தினர் என காணாமற்போன சிவசோதி...
தனது அலைபேசியை திருடியதாகக் கூறி, 6ஆம் தர மாணவர்கள் மீது 9ஆம் தர மாணவர்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஸ்கந்தபுரத்திலுள்ள பிரபல தமிழ் பாடசாலை அதிபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள்...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஸ்வரன் (வயது 26) எனும் இளைஞர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அதேபிரதேசத்தைச் சேர்ந்த ஆரியரத்னா வசந்தன் (வயது 20) எனும்...
நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட சாட்சியாளர்கள் எட்டுப்பேரையும், ஜனவரி மாதம் 18ஆம் திகதியன்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை சூளைமேட்டில், 1986ஆம் ஆண்டு, தீபாவளி கொண்டாடத்தின் போது டக்ளஸ் உள்ளிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், சென்னை பிரஜையொருவரைச் சுட்டுக்கொன்றதாகக்...
"யாழ். குடாநாடு மற்றும் தீவகப் பகுதிகளின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு இரணைமடு குடிதண்ணீர்த் திட்டமே நிரந்தரத் தீர்வாகும்'' என்று நாடாளுமன்றில் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு மக்களின் பிரதிநிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் அந்த மக்களுக்கு மிகக் குறைந்தளவான செலவில் இரணைமடு பாரிய குடிதண்ணீர்த் திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும்...
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் தனது விசாரணைகளை இன்றும், நாளையும் மேற்கொள்ளவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
