குண்டசாலை மற்றும் மெததும்பர பிரதேச செயலகப் பகுதிகளிலுள்ள சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
திகன, அம்பகோட்டை, குபுக்கந்துர, செனரத்வெல, மாபேரிதென்ன, நிதுலேமட ஆகிய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.15 – 10.45 அளவிலான காலப் பகுதியில் பாரிய சத்தத்துடன் நிலம் அதிர்ந்ததாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை மையத்திடம் வினவியபோது, இந்த நில அதிர்வு தொடர்பில் பல்லேகல நிலையத்தில் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.