- Friday
- November 21st, 2025
"வடக்கு, கிழக்கு இராணுவத்தினரால் வீடுகள் அழிக்கப்படவில்லை. அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று சபையில் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, புலிகளால்தான் வீடுகள் அழிக்கப்பட்டன. அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.கூறினார். வடக்கு, கிழக்கில் இன, மத, கட்சி பேதங்களைக் கடந்து மீள்குடியேற்ற அமைச்சுடன் இணைந்து வீடமைப்புத் திட்டம் 2016...
"வன்னியில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்றபோது எனது மகன் ஐங்கரன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் நின்றார் எனவும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பாலச்சந்திரனுடன் அவரை இராணுவத்தினர் கைதுசெய்தனர் என்றும் நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர். ஆனால், பாலச்சந்திரன் இராணுவத்தினரால் சுட்டுக்...
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில், இந்தக் குற்றப் பத்திரிகைகளை, சட்ட மா அதிபர் தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு...
வலி.வடக்கில் விரைவில் மீள்குடியேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கனடா உயர்ஸ்தானிகருக்கு இன்று புதன்கிழமை தெரிவித்தார். கனடா உயர்ஸ்தானிகர் வைட்டிங் யாழிற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது ,யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அந்தச் சந்திப்பின் போதே, யாழ். மாவட்ட...
யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்துக்கு மகேஸ்வரி நிதியத்தால் வழங்கப்பட வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபா பணம் சம்பந்தமான விசாரணைகள் மீண்டும் கோப்பாய் பொலிஸாரினாலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய புலனாய்வுத்துறையினராலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என சங்கத்தின் பணிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மகேஸ்வரி நிதியம் தமக்கு தரவேண்டிய பணத்தை தரமறுப்பதாகத் தெரிவித்து லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததுடன்...
கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். வத்திக்கானுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தை இன்றுக்காலை வந்தடைந்த போதே, இவ்வாறு இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு– செலவுத்திட்டத்துக்கென நிதி ஆணைக்குழுவிடம் கோரிய நிதி ஒதுக்கீட்டில் 40சதவீதம் மாத்திரமே கிடைத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான நிதிச் சட்டமூலத்தை சபையில் செவ்வாய்க்கிழமை(15) சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மீண்டெழும் செலவினத்துக்காக 20,479 மில்லியன்...
வட மாகாணத்தின் எல்லைப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக தமிழ் மக்களை மாகாணத்தின் எல்லைகளை நோக்கி நகர்த்த வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் எல்லைகளால் வட மாகாணத்தின் எல்லைகள் சுருங்கும் அபாயம் ஏற்படும் என வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்தார். வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார். தமிழ் தேசியக்...
தமிழகத்தில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் அதிகபட்சமாக விமானத்தின் மூலம் கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையம் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 40 கிலோகிராம் நிறையுடைய பொருட்களை மாத்திரமே விமானத்தின்...
வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக டிசம்பர் 26ஆம் திகதியை வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தி உள்ளது. வடக்கு மாகாணசபையின் 41ஆவது அமர்வின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (16.12.2015) வடக்கு சுற்றாடல் அமைச்சர் இது தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில், இயற்கையின் சீற்றங்கள் புதியன அல்ல. பூமியில் வாழ்கின்ற உயிரினங்கள் பூமியில்...
புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையின் பின்னர் இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கென தனியான விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிறுவ முடியாத நிலைமை காணப்படுவதாக மகளிர் – சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்று முன் தினம்...
விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்திருந்த நிலையிலேயே எனது கணவன் படையினரிடம் சரணடைந்தார். என்னைப்போல் பலர் தங்கள் கணவனை, பிள்ளையை ஒப்படைத்தார்கள். இப்போ அவர்கள் காணாமல்போய் விட்டார்கள் என கூறுவதை நாம் ஒத்துக்கொள்ள முடியாது. என்று விடுதலைப் புலிகளின் அரசியல் நிர்வாகத்துறை பொறுப்பாளர் விஜிந்தனின் மனைவி சாட்சியம் அளித்தார். காணாமல்போனவர்களை...
வெள்ளை வானில் வந்த இரணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட எனது மகனை தேடி யாழ். ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்குச் சென்றபோது அம்மா அம்மா என்று எனது மகன் உரக்கக் கத்திக் கொண்டிருந்தான். எனினும் அங்கிருந்த இராணுவத்தினர் என்னை மிரட்டி அனுப்பி வைத்துவிட்டனர் என தாயொருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் நாள்...
தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் வடக்கில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் வைத்திருந்த குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை. முன்னைய அரசாங்கம் வடக்கில் பல ஏக்கர் நிலங்களை தமது சொந்த நிலங்களைபோல் பாவித்தனர். அதேபோல்...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இன்று பாகிஸ்தானுக்கு சொந்தமான சீமெந்து தொழிற்சாலையாக செயற்பட்டு வருகிறது. அத்தொழிற்சாலையின் இரும்புகள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்து கொள்ளுப்பிட்டியில் 25 மாடி அலுவலகம் அமைக்கப்படுவதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி நேற்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின்...
காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். ஆணைக்குழுவின் சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்டவர்களுக்கான அமர்வு சங்கானை பிரதேச செயலகத்தில் நேற்று (15) நடைபெற்ற போது, ஆணைக்குழுவின் விசாரணையின் முடிவில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காணாமற்போனோரின் உறவினர்கள்...
கொழும்பில் இன்று அதிகாலை ஒன்றரை மணிநேரத்தில் 114.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இலங்கையில் வெறுப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டத்திருத்த முன்வரைவுகளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இந்த சட்டத்திருத்தத்தை கடும்போக்கு பௌத்தவாத அமைப்பான பொதுபல சேனா எதிர்த்துள்ளது. அதேபோல சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும், அரசாங்கம் அந்த சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என்று கோரியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும்...
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் மேம்போக்கான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தினாலும் மாகாண சபைகள் மீது கட்டுப்பாடுகளை விதித்து அதன் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார். வடமாகாண சபையின் 41ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது. இதில் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சபையில்...
Loading posts...
All posts loaded
No more posts
