யாழ்ப்பாணத்தில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றமையால் தேங்காயானது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
தேங்காய்கள் அவற்றின் அளவுக்கேற்ப 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையில் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.
தேங்காய் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து கிளிநொச்சியின் பளை, தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தேங்காய் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும்,தேங்காய் தட்டுப்பாட்டின் காரணமாக முட்டுக்காய் தேங்காய்களையும் விற்பனை செய்யும் நடவடிக்கையில் பலர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.