Ad Widget

‘என்ரிக்’ இன் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு வருந்துகின்றோம்

கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் காண வருகை தந்திருந்தவர்களின் பணத்தை மீளவழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சிக்காக ரூபா 5,000 முதல் 50,000 வரை பெறுமதியான டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை இலங்கையின் ‘Live Events’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

Live Events என்ற நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் போது பெண்கள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டிருந்ததாகவும், இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தக் கூடியதாக இருந்ததென்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை காணச்சென்ற பெண்ணொருவர், பாடகரின் மீது தனது மார்புக் கச்சையை கழற்றி அவர் மீது வீசுவது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது தொடர்பில் நேற்று தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு தாம் வருந்துவதாக முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதனைக் காண வந்தவர்களுடைய பணத்தை மீளவழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1202971741Kumar

Related Posts