வித்தியா படுகொலை சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேக நபர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார்.

நேற்றய தினம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.

மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கின் சான்று பொருட்களின் ஆய்வு அறிக்கையானது நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

Related Posts