Ad Widget

தமிழ் மக்கள் பேர­வைக்கும், வட மாகாண சபைக்கும் தொடர்பில்லை!

அண்­மையில் உரு­வா­கி­யுள்ள தமிழ் மக்கள் பேர­வைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்­த­வி­த­மான தொடர்பும் இல்லை என, மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேரவை என்ற சொல்லை கைத­டியில் அமைந்­துள்ள வடக்கு மாகாண சபை அலு­வ­ல­கத்­துடன் தொடர்புபடுத்தி பொது மக்கள் நோக்­கு­கின்ற நிலை காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பாக பலர் என்­னுடன் நேரிலும் தொலை­பேசி மூலமும் கேட்­டுள்­ளனர்.

வடக்கு மாகாண சபை மக்­களின் தேவை­களை நிறைவு செய்­வ­திலும் உட­ன­டி­யாக மேற்­கொள்­ள­ வேண்டிய அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் மேற்­கொள்­வ­தற்கு உரிய நடவடிக்கைகளை மேற்­கொண்டு வரு­கி­றது.

ஜனா­தி­பதி வலி. வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து வாழும் மக்­களின் முகாம்­களை நேரில் பார்­வை­யிட்டு குறித்த மக்­களின் பிரச்­சி­னை­களை, உண்மை நிலையை கண்­ட­றிந்து ஆறுதல் கூறி­யி­ருப்­பது அண்­மைக்­கால அர­சியல் நிலைப்­பாட்டில் ஏற்­பட்­டுள்ள கருத்து நிலை மாற்­றத்தை வெளிக்­காட்­டு­கின்­றது.

இடம்­பெ­யர்ந்து வாழும் மக்களின் நிலை அவரின் உள்ளத்தைத் தொட்டிருக்கும். ஜனாதிபதி குறிப்பிட்ட பிரகாரம் நடவடிக்கைகளை முன்னெடுப்பாரென நம்புகின்றோம் என்றார்.

Related Posts