- Thursday
- August 6th, 2026
பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை, நிலையான, மிகவும் அர்த்த பூர்வமான சுதந்திரமாக மாற்றிக் கொள்ளும் பொறுப்பு தற்போது நம் அனைவர் மீதும் உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (04) நாட்டின் அனைத்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்...
இலங்கையின் 68ஆவது சுதந்திரதினம் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று காலை (4) 8.45 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது. சுதந்திரத்தின் இதயத்துடிப்பு என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள சுதந்திரத்தின நிகழ்வானது இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. காலையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புகளும் மாலையில் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை...
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக வடக்கு முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மீனவர் பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தவுள்ளதாகவும்,...
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது தொடர்பிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றுபிற்பகலில் அலரி மாளிகையில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிழிப்படலங்களை இறந்தவர்களிடம் இருந்து பெற்று அவற்றை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் இலங்கை தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனக்கு மீதமான கண்ணின் கருவிழிப்படலங்களை வேறு நாடுகளுக்கும் கொடுத்து உதவுகிறது. ஆனால்...
தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பயணித்த பாடசாலை மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பி.ப 1மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலி பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி...
பலாலி விமான நிலையத்துக்குரிய காணிகளைச் சுவீகரிப்பதற்காக நில அளவைச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது வல்லை - அராலி வீதியின் ஒரு பகுதியும் அதனுள் உள்ளடங்கவுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். மக்களின் காணிகள் 1987ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் திகதி சுவீகரிப்புச் செய்யப்பட்டன. இதன்...
முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் ஆகியோர் காணாமல் போனமை குறித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர்...
வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தறுமாறு கோரி எதிர்க்கட்சி தலைவருக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய இழுவைப் படகுகள் வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் வடக்கு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான...
மட்டக்களப்பில் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தன்று காணாமல் போனோர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர். வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் அருகில் நடாத்தப்படவுள்ள இப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர். “நாட்டுக்கு சுதந்திரம் எமக்கோ கண்ணீர் ” என்ற துயர் நிறைந்த...
பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமாரின் வாசஸ்தலத்தில், இன்று புதன்கிழமை பொலித்தீன் பையில் கட்டிய நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். நீதவானின் வீட்டில் உள்ள கிணற்றடியில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவருக்கு 18 மாத ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. 53 வயதான ஜீ.யோகேந்திரன் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனிய பிரஜைக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கருதப்படுகின்றது....
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் வலியுறுத்துவோம்! – மாவை சேனாதிராசா
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்படி, இலங்கை வரவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் நேரில் வலியுறுத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஐக்கிய...
திருகோணமலை, சம்பூரில் கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 6) கடந்த வாரம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தான். தனது சகோதரனுடனும் தற்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனுடனும் இந்தச் சிறுவன்...
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நேர முகாமைத்துவம் பின்பற்றுதல் ஒரு பிரச்சினையாகத் தொடர்கின்றது. தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றபோது, மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஒரு நிமிடத்தில் சுருங்கச் சொல்லுமாறு இணைத் தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசா அடிக்கடி வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவர் உரையாற்றும் போது. 21 நிமிடங்களை எடுத்துக்கொண்டார். இணைத்தலைவர்களின்...
வலிகாமம் வடக்கில் அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னைய காலங்களில் இயங்கிய வங்கிகள் மீண்டும் அந்த இடங்களில் இயங்கவேண்டும் என தெல்லிப்பழை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேக நபரை கடும்நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜே.பிரபாகரன், நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) அனுமதித்தார். ஏனைய நான்கு சந்தேக நபரையும் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கிளிநொச்சி, கண்டாவளை பகுதியில்...
கார்ல்டன் விளையாட்டு நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட்டில், நிதி மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் வெலிக்கடை சிறைச்சாலையில், விளக்கமறியல் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை உண்ணுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இதனால், அவர்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்...
2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை புலிகளில் முன்னாள் செயற்பாட்டாளரான எமில்காந்தன் அம்பலப்படுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்காமல் இருக்க நடவடிக்கை...
வடக்கு மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகுகிறார் என ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ஜ.ஏ.சந்திரசிறி பதவி விலகினார். இதையடுத்து கடந்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதி பளிஹக்கார ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவர் பதவியிலிருந்து விலகுகிறார்...
Loading posts...
All posts loaded
No more posts
