- Friday
- November 21st, 2025
கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்த பின்னர் அரச சேவைக்காக புதிய சம்பள கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை உருவாக்கவில்லை என்றால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டு மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படக் கூடும் என அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே கூறியுள்ளார். அரச ஊழியர்களுக்கு இடைக்கால வரவு...
கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம்(22) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெறும் இச்செயலமர்வில் சிறுவர்...
இயேசுவின் வாழ்வினை அடிப்படையாக கொண்டு எமது வாழ்வினை நாம் அனைவரும் கட்டியெழுப்புவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் இன்று (25) அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நத்தார் தினத்தினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வௌியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும்...
தமிழக முன்னால் முதலமைச்சர் எம்.ஜி. இராமசந்திரனின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு பகுதில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்க...
இந்திய மீனவர்கள் 51 பேர் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். குறித்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை காலை முதல் தமது உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்கள். கடந்த தினங்களில் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்ப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குறித்த 51 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், பண்டிகைக்...
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் இறையான்மை ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்க படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் என்பதோ அல்லது ஒற்றையாட்சியோ நிச்சயமாக ஏற்றக்கொள்ளப்பட முடியாது. அது இனப்பிரச்சனைக்கான தீர்வல்ல என அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல்...
புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புங்குடுதீவு கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (24.12.2015) விவசாயிகளைச் சந்தித்து முட்கம்பிச் சுருள்களை வழங்கி வைத்துள்ளார். புங்குடுதீவில் கட்டாக்காலி மாடுகளால் நெற்செய்கை பாதிக்கப்படுவது விவசாய சம்மேளனங்களால் வடக்கு விவசாய அமைச்சரின் கவனத்துக்குக்...
தனியார் துறையில் பணிபுரியும் சேவையாளர்களின் ஆகக் குறைந்த வேதன தொகை தொடர்பில் சட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்ட மூலத்துக்கு அனுமதியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் வேலைப் பார்க்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவிந்திர சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகள்...
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்க்குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இன்னும் உறுதியான வடிவத்தை வெளியிடாததனால் இந்த விடயம் குறித்த நிகழ்ச்சி நிரலில் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்...
வெசாக் மற்றும் சிங்கள வருடப் பிறப்பை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படுவது போன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில்...
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்தால் தமிழ் மக்கள் அதனை நிராகரிப்பார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள்; குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வுத்...
வசதி குறைந்தவர்கள் மற்றும் குறைந்த செலவில் திருமணத்தை நடத்தி முடிப்பவர்களுக்கு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கின்றது. திருமண சுப நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயத்தில் குறைந்தது 4 திருமணங்கள் நடைபெறும். இந்தளவுக்கு அங்கு திருமணங்கள் நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், குறைந்த செலவில் திருமணம் நடத்தி முடிக்கலாம் என்பதாகும். திருமணம் நடத்துவதற்காக...
கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களை தலா ஐம்பதாயிரம் ரூபாய் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணைகளிலும் செல்லுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி...
நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டுக்குள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசையா பிரதீபன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற தாபரிப்பு வழக்கு...
அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சு “தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” என பெயர் மாற்றப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை திகதியிடப்பட்டு வெளியான இலக்கம் 1945/40 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சின் பெயர் அதிகாரபூர்வமாக, “தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” என மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் ஜனாதிபதி...
சவுதி அரேபியாவில் ஆணொருவருடன் தகாத உறவைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு கல்லால் அடித்து கொல்லுமாறு, இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த பெண் மூன்று...
2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில் வௌியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 31ம் திகதி குறித்த பெறுபேறுகள் வௌியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் மக்களுக்கு நன்னீர் வழங்கும் முகமாக மத்திய அரசினால் முன்மொழியப்பட்டு மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் கடல்நீரினை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிராக ஒரு தொகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றினை வடமராட்சி கிழக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று(23) இடம்பெற்றது.குறித்த பிரதேசத்திலிருந்து கடல்நீரை...
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் இன்று முதல் கைது செய்வற்கான விசேட சட்டம் ஒன்று அமுல் படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தையொட்டியே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட சட்டம் இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பற்ற இடங்களான ஆறு, கடல், குளங்களில் பொதுமக்கள் குளிக்க...
முல்லைத்தீவில் யுத்த காலத்தில் கைவிடப்பட்ட வாகனங்களுக்காக நட்டஈடு வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களை மக்கள் கைவிட்டுச் செல்ல நேரிட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பொது மக்கள் கைவிட்டுச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவின் அநேகமான இடங்களில் இந்த...
Loading posts...
All posts loaded
No more posts
