பால்மா விலைகள் உயரும் அறிகுறி!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தீர்வை வரவு – செலவுத் திட்டத்தில் கிலோவொன்றுக்கு 135 ரூபாவிலிருந்து 225 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து விற்பனை விலைகளை அதற்கேற்ப அதிகரிப்பதற்கான அனுமதி கோரி பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதற்கமைய இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலையை 35 ரூபாவாலும்,...

குடாநாட்டில் இன்னமும் 12 ஆயிரம் குடும்பங்கள் மீளக்குடியமரவில்லை!

யாழ். குடாநாட்டில் 10,716 தமிழ்க் குடும்பங்களும், 1,465 முஸ்லிம் குடும்பங்களும் உள்ளடங்கலாக 12,181 குடும்பங்கள் இன்னமும் மீள் குடியமர்த்தப்படாதுள்ளன என்று மாவட்டச் செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியமர்த்தப்பட வேண்டிய 10,716 தமிழ்க் குடும்பங்களில் 1,318 குடும்பங்கள் குடாநாட்டில் உள்ள முகாம்களில் வாழ்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, குடாநாட்டில் தற்போது 190,150 குடும்பங்களைச் சேர்ந்த 617,722...
Ad Widget

வடக்கு மாகாணசபை அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு!

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன என கூறப்படுகிறது, யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை மூடிய அறையினுள் வைத்து இரகசியமாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

மகேஸ்வரனின் கொலை தொடர்பில் அவரது சகோதரர்களை விசாரியுங்கள்

முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் கொலை தொடர்பில் அவரது 5 சகோதரர்களிடமும் விசாரணைகள் மேற்கொண்டால் யார் கொலையைச் செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படும். சகோதரர்களுடன் நான் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதால் இந்தவிடயம் தனக்குத் தெரியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை...

வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள காணிகள் விற்பனை

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட கீரிமலை, மாவிட்டபுரம் ஆகியவற்றை அண்மிய பகுதிகளில் அமைந்துள்ள காணிகள், அவற்றினது உரிமையாளர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது மக்கள் மீளக்குடியேறி வருகின்ற நிலையில், அம்மக்கள் தங்களுக்கு மேலதிகமாகவுள்ள காணிகளை விற்பனை செய்து வருகின்றனர். அத்துடன், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணிகள் இருந்தும், இடம்பெயர்ந்ததின் காரணமாக யாழ்ப்பாணத்தின் வேறு இடங்களில் காணிகளைக்...

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு 9ம் திகதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து, ஒருவருட நிறைவைக் கொண்டாடும், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியன்று, விசேட அறிவிப்பொன்று விடப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. புத்தாண்டின் கன்னியமர்வு 8ஆம் திகதி ஆரம்பமாவதுடன், மறுநாள்...

தமிழ் மக்கள் பேரவையை வரவேற்கின்றார் கருணா ! இணைந்து செயற்படுவது குறித்தும் பரிசீலனையாம்!!

வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார் என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பங்குபற்றலுடன் கடந்த சனியன்று 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பு அங்குரார்ப்பணம்...

கிராம இராச்சியம் குறித்து அச்சமடையத் தேவையில்லை! கூட்டமைப்புக்கு அறிவுரை வழங்கும் அரசு!!

கிராம இராச்சியத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. இதன் மூலம் வடக்கு, கிழக்கின் தனித்துவம் பேணப்படும். இதனால் வட மாகாண சபைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான...

காணாமற்போனோர் தொடர்பில் அரசே பொறுப்புக் கூற வேண்டும்!

காணாமற்போனோர் விடயம் தொடர்பில் அரசே பொறுப்புக் கூற வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் நேற்றய தினம் (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு...

யாழில் மாணவர்களுக்கு ஹெரோயின் விற்க முயன்ற நால்வர் கைது

யாழ். பாடசாலை ஒன்றின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ், நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் வசமிருந்த ஒன்பது ஹெரோயின் பைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் சங்கரப்பிள்ளை வீதி, ஆணைக்கோட்டை, மற்றும் இணுவில் தெற்கு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீண்டகாலமாக இவர்கள் மாணவர்களை இலக்கு...

இணையத்தளங்களில் அவதூறு செய்தி வெளியிட்ட சந்தேகத்தில் யாழில் ஒருவர் கைது

இணையத்தளங்களில் அவதூறு செய்திகளை வெளியிட்டவர் எனும் சந்தேகத்தில் நபர் ஒருவரை ,இணைய குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர். இணையத்தளங்கள் மூலம் அவதூறுக்கு உள்ளானவர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். குறிப்பிட்ட இணையத்தளங்கள் சில தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை பாலியல் குற்றம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அவை தொடர்பில்...

தமிழக மக்களுக்கான நிதியுதவி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் கையளிக்கப்படும்

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக வடக்கு மாகாண சபையினால் சேர்க்கப்பட்டுவரும் நிதி உரிய காலத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் கையளிக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். நேற்றைய தினம் வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்திய...

அவதானம்..! 6000 பாலியல் தொழிலாளர்கள் மசாஜ் நிலையங்களில்

கொழும்பு நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்களில் 4500 முதல் 6000 பேர் வரையிலான பாலியல் தொழில் சேவையில் ஈடுபடுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையோருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந் நிலையங்களுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டில் எச்.ஐ.வி. தொற்று வெகுவாக பரவி வருகின்றடை...

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஜனாதிபதிக்கு நன்றி – சீ.வி.கே.சிவஞானம்

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம். மாகாணசபை பேரவை செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வலி,வடக்கு உயர்பாதுகாப்பு...

 சூளைமேடு அழைப்பாணை பொய்யான செய்தி

இந்தியா, தமிழகம் சூளைமேடுப் பகுதியில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தி பொய்யானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர்...

வடக்கு மாகாணசபையின் நன்னீர் திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச கடல்நீரை நன்னீராக்கி யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை புதன்கிழமை மருதங்கேணி பிரதேசத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மருதங்கேணி கடற்றொழிலாளர் சங்கங்கள். வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவுள்ளன. வடமாகாண சபையால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத்...

செந்துாரனின் குடும்பத்திற்கு அச்சுறுத்தல்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவன் செந்துாரனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். குறித்த மாணவனின் குடும்பத்திற்கு பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், மற்றும் படையினரின் அச்சுறுத்தல்கள் காணப்படுவதனால் அவர்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்....

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்கிறோம்!சம்பந்தன்

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்பதாகவும், அதேவேளை, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்று எழுப்பிய...

சக மாணவிகள் கேலி : தீ மூட்டிக்கொண்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீக்காயங்களுக்கு உள்ளாகி நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று திங்கட்கிழமை (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இணுவில் பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும், கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுதாகரன் லதுசாயினி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்றதால்,...

தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே காரணமாகும். ஆனால் இந்த அமைப்பு கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் திங்கட்கிழமை (21) கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...
Loading posts...

All posts loaded

No more posts