வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முதியவர் மீண்டும் வெளிநாடு செல்ல மனமற்ற நிலையில் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொக்குவில் கிழக்கில் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் கிழக்கு கல்லூரி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சபாபதி பாலசுப்பிரமணியம் (வயது 80) என்பவர் கடந்த வாரம் நியூசிலாந்து நாட்டில் இருந்து மனைவியுடன் தனது வீட்டுக்கு வந்து இருந்தார்.
இன்று மீண்டும் கொழும்பு சென்று வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில், நேற்று மதியம் அயலில் உள்ள கொக்குவில் புதுக்கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பவில்லை.
இந் நிலையில் இவரை உறவினர்கள் அயலவாகள் தேடிய போதிலும் கண்டு பிடிக்காத நிலையில் மாலை நேரம் நந்நதாவில் பகுதயில் உள்ள கிணற்றில் அவருடைய சடலம் மிதப்பதை அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.
யாழ்ப்பாணம் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலத்தை நேற்று ஒப்படைத்து இருந்தார்கள்.
இன்று மதியம் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரனையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.