- Friday
- November 21st, 2025
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். இது குழப்பத்துக்கே வழிவகுக்கும். எனினும், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். 'தமிழ் மக்கள் பேரவை' அமைப்பின் உருவாக்கத்துக்கு...
வரவு செலவுத் திட்டம், இலங்கை - இந்திய இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் மாலபே தனியார் பல்கலைக்கழகம் போன்றன தொடர்பில், உரிய தீர்வு பெற்றுத் தர அரசாங்கத்திற்கு இரு வாரங்கள் வழங்குவதாகவும், அதற்குள் தீர்வு கிட்டாவிடில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுடன் கையெழுத்திடவுள்ள ஒப்பந்தம் தொடர்பில் திட்டமிடல்களைத்...
கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று (22) காலை 10.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெறவுள்ளது. தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்ட செயலக சிறுவர்...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி - கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவின்...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாண சபையால் வெள்ள நிவாரண நிதி சேகரிக்கப்படுவது எதிர்வரும் 30ஆம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வடமாகாண சபையால் நிதி சேகரிக்கும் நடவடிக்கை கடந்த 7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான...
யாழ்ப்பாணம், பிரதான வீதியில் மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் சுடத் மடுகல்ல, லங்கா இந்திய பெற்றோலிக் கூட்டுஸ்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர்...
வடமாகாண சபை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் 258 பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளோம். ஐ.நா தீர்மானங்கள் உள்ளிட்ட சில பிரேரணைகள் நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தெரிந்தும் நிறைவேற்றியுள்ளோம் என வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் திங்கட்கிழமை (21) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், வட மாகாண சபையின் அதிகாரங்களுக்குட்பட்ட...
ஒரு நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தால் அது வட மாகாண சபைக்கான அழைப்பு என்று யாரும் கருதக்கூடாது. முதலமைச்சர் மாத்திரம் வட மாகாண சபை அல்ல. உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் திங்கட்கிழமை (21) தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டிற்கு சென்ற பின்னர் கொழும்பு திரும்பியுள்ளார். நேற்றய தினம் யாழிற்கான விஜயத்தில் ஜனாதிபதி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், மக்களையும் சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் தனது பயணத்தின் முடிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன்...
இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 'கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வழிபாட்டுக்கு உரியவை அல்ல' என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய...
நுவரெலியாவில் நடைபெற்ற 2015 ம் ஆண்டுக்கான அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுப்போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்கு கொண்ட உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் சண் தயாளன் அவர்கள் இரண்டு தங்கப்பதங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கதையும் வென்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டார். இவர் யாழ் இந்துக்கல்லூரியின் பழையமாணவனும் முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமாவார். சிறந்த துடுப்பாட்ட, உதைப்பந்தாட்ட வீரரும் மத்தியஸ்தருமாகிய இவர் கல்லுாரிக்காலத்தில் மைதான...
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ்,வலி வடக்கு மக்கள் தங்கியிருக்கும் கோணப்புலம் நலன்புரி முகாமுக்கு சென்றிருந்தார். அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறுவர்கள் உட்பட அனைத்து...
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனநிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரம் கைவிட்டு போன பின்னர் முன்னாள் ஜனாதிபதி அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 70வது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடிய இவர், மறுதினம் இலங்கையின் புகழ்பெற்ற...
நேற்று யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். யாழ். ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில், அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
வட மாகாணத்தில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான தேவைகளைக் கண்டறிவதற்காக மாவட்ட மட்டத்திலான கூட்டம் 5 மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளது. அத்துடன், மீள்குடியேற்றம் தொடர்பிலான மாகாண கொள்கை உருவாக்கப்படுவதாகவும் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியிடம் அதனைக் கையளிக்கவுள்ளதாகவும் வட மாகாண புனர்வாழ்வு அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலேயே அவர்...
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதியை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு தேசிய அதி வேக இணையத்தள வேலைத்திட்டம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்துதல் ஆணைக்குழு ஆகியவற்றுடன் ஒன்றிணைந்தே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. தற்போது சில பாடசாலைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள 128 Kbps...
இந்தியா உள்ளிட்ட மேம்பட்ட நாடுகளின் உதவியுடன் நாட்டு ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சில படைப் பிரிவினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு, தியாதலாவா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்க பேசியதாவது: ஆசியக் கண்டத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு அடுத்தபடியாக பழைமையானது இலங்கை ராணுவம்....
இந்திய இராணுவத்தின் யாழ் வைத்தியசாலை படுகொலை தொடர்பில் Tears of Gandhi என்ற பெயரில் ஆவணப்படம் வெளியாகி உள்ளது. அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவம் 1987 யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பொதுமக்கள் மீது புரிந்த படுகொலைகளின் சாட்சியமாக உடகவியலாளர் ஜெராவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவணப்படம் இதுவாகும்
அரச நத்தார் கொண்டாட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (20) பிற்பகல் யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில். அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையை புத்திஜீவிகள் புரிந்து கொண்டுள்ளனர். மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். புரிந்துகொள்ள முடியா சில அடிப்படைவாதிகள் கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி எதுவேணுமென்றாலும் விமர்சனங்களை முன்வைக்கலாம்...
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். பலவிதமான மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், கட்சிகளும் சேர்ந்து நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்கலாகத் தொடங்கியுள்ள ஒரு மக்கள் இயக்கம் அது என முதலமைச்சர் இன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் இதற்கு தலைமை வகிக்க ஏற்பாட்டாளர்கள் குழு என்னை அழைத்தார்கள். உண்மையில் இணைத்தலைவராகத் தான் என்னை...
Loading posts...
All posts loaded
No more posts
