வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு

வடமாகாணத்தின் சாதனை வீர வீராங்கனைகளிற்கான வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (30) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

CV-colors-night

வடமாகாண கல்வி கலாசாரா விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவை மாகாண அமைச்சர் த.குருகுலராஜா தலைமைதாங்கினார்.

இந்த வர்ண இரவுகளில் சாதனை வீர, வீராங்கனைகளுக்கான விருதுகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கினார்.

தொடர்ந்து ஆறாவது வருடமாக நடைபெற்றுவரும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் இம்முறை சர்வதேச ,தேசிய மற்றும் உள்ளுர் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்த வட மாகாணத்தினைச்சேர்ந்த வீர வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் தேசிய மட்ட விளையாட்டுக்களில் பங்குபற்றி பதக்கம் வென்ற 16 வீர வீராங்கனைகளும் பெரு விளையாட்டுக்களில் வெற்றியீட்டிய அணி வீரர்களும் இலங்கைப் பாடசாலைகளுக்கான போட்டிகளில் பங்குகொண்டு பதக்கம் வென்ற 54 வீர வீராங்கனைகளும் பெரு விளையாட்டுக்களில் பதக்கம் வென்ற 10 பாடசாலைகளின் அணிகளும் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட போட்டிகளில் பதக்கம் வென்ற 63 வீராங்கனைகளும் பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் விளையாட்டுத்துறை வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related Posts