Ad Widget

கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை பாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும்!

இலங்கையின் கலாச்சாரத்திற்கு பங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டுமென அகில இலங்கை இந்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது

விசேட கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை பாதிக்கும் வகையிலான தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

வன்முறையையும் பாலுணர்வையும தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்படக்கூடாது.

வன்முறைகளையும், பாலுணர்வையும் தூண்டும் வகையிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்யக் கூடிய ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அனைத்து மத சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான தணிக்கை குழுவொன்றை நிறுவி அதன் ஊடாக இவ்வாறான நிகழ்ச்சிகள் நாடகங்களின் காட்சிகளை தணிக்கை செய்ய முடியும்.

நிகழ்ச்சி ஒளிபரப்புச் செய்யப்பட முன்னதாகவே அவற்றை பார்வையிட்டு தடை செய்யவோ அந்தக் காட்சிகளை தணிக்கை செய்யவோ முடியும்.

இவ்வாறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றம் தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்புச் செய்தவனால் இன நல்லிணக்கத்திற்கு பாதக நிலைமையை உருவாக்குவதுடன், நாட்டின் எதிர்கால சந்தத்தியினரின் நலனையும் பாதிக்கும் என அகில இலங்கை இந்து காங்கிரஸ் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts