Ad Widget

தூர்வாருமாறு இராணுவத்தைச் சொல்லவில்லை

யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் வடிகான்களை மூடிய இராணுவத்தினர், யுத்தத்தின் பின்னர் இந்த வடிகான்களை மீண்டும் மறுசீரமைக்குமாறு தருமாறு கூறினேனே தவிர, இராணுவத்தினரை யாழ்பாணத்தில் குப்பை கான்களை தூர்வாருமாறு கூறவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண சபையைக் கட்டியெழுப்புவது தொடர்பான யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள், யாழ்ப்பாணத்தில் இருந்த வடிகான்கள் ஊடாக கிளைமோர் தாக்குதல் மற்றும் ஏனைய தாக்குதல் மேற்கொள்வதனால், இராணு வீரர்கள் ஊடாக குறித்த வடிகான்கள் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தற்போது, யுத்தம் நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்த வடிகான்களை மீண்டும் திறப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட மாகாணசபையில் கூறியதாக சி.வி.குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக அதிக மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெள்ளம் ஏற்பட பிரதானமான காரணமாக, வடிகான்கள் மூடப்பட்டமையால் வெள்ள நீர், கடலுக்கு செல்ல முடியாமல் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

அத்துடன், இராணுவம் தொடர்பில் தான் தவறான கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் இது தொடர்பில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சி.வி. மேலும் குறிப்பிட்டார்.

Related Posts