சம்பந்தனுக்கு உதவிய பிரேமதாசவின் பாரியார்!

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஆசனத்தில் இருந்து எழுந்திருக்க, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச உதவியுள்ளார். 68வது தேசிய சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வந்த போது, அதில்...

வி்த்தியா கொலை வழக்கு: சிக்கலில் ஊடகவியலாளர்

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் செய்தியாளரே நாளை ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானாக வை.எம்.எல்.ரியால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த...
Ad Widget

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது பெரிய விடயமல்ல!- சம்பந்தன்

சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை பெரிய விடயமல்ல என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன். இது புதியதுமல்ல, அதேவேளை ஆச்சரியப்பட வேண்டியதொன்றுமல்ல. ஏனெனில் தேசிய கீதம் ஏற்கனவே சுதந்திர தினத்தில் தமிழில் பாடப்பட்டு வந்த ஒன்றே. இது பெரிதான விடயமல்ல. இதனை மீள நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கத்திற்கும் நன்மையாகும். அதே போன்று...

புகையிலைச் செய்கைக்கு விரைவில் தடை!

புகையிலை செய்கையை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வர்த்தக விவசாய செய்கையாக புகையிலையை பயிரிடுவதைத் தவிர்த்து, உணவுப் பொருட்கள் பயிரிடப்படும் என அவர்...

சம்பந்தன் ஆனந்தக் கண்ணீர்!

தேசிய வைபவம் காலிமுகத்திடல் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த வைபவ நிறைவின்போது, தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட்டது. வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனும் கலந்துகொண்டார். தேசிய கீதம், தமிழ்மொழியில் பாடப்பட்டபோது அவரின், கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக, இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளின்...

வடக்கின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

வடக்கு மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளார். தனக்கு இவ்வாறானதொரு பதவி கிடைக்கவுள்ளது என அறியக் கிடைத்தது என்று ரெஜினோல்ட் குரேயே உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார இந்த மாத இறுதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார். ஆளுநர் பதவியில் இருந்து விலகிக்கொள்வது குறித்து அவர்...

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கையின் சுதந்திர தினமான நேற்று வியாழக்கிழமை கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தைக் காணக்கூடியதாக இருந்தது. கைலாசபதி கலையரங்கு மற்றும் நூலகப் பகுதி ஆகிய இடங்களிலேயே கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் 68வது சுதந்திர தினமான நேற்று காணமால் போனவர்களின் குடும்ப உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். கறுப்பு நிற துணிகளால் தமது வாய்களை அடைத்தவாறு வவுனியா நகர சபைக்கு முன்னாள் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். போரின் போது இராணுவத்திடம் கையளி்க்கப்பட்ட தமது உறவுகளை எங்கே என்று எழுதப்பாட்ட பதாகைகளை இவர்கள் ஏந்தியிருந்தனர்....

ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோவை வௌியிட்ட இருவருக்கு சிக்கல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தலங்களில் வீடியோவை பதிவு செய்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா...

இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினம் – சிறிதரன்

இலங்கையின் சுதந்திர தினமானது தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினமாகவே பார்க்கப்படுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி கந்தசாமி கோவிக்கு அருகில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தினால் நேற்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 09.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும்...

யாழில் சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 68 ஆவது சுதந்திர தினத்தையொட்டி யாழ் மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது. மாவட்டத்தின் பிரதான சுதந்திரதின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு என்.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசியக்கொடியை அரசாங்க அதிபர் ஏற்றிவைக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு...

அழகிய தாய்நாட்டை அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்!

எமது அழகிய தாய் திருநாட்டினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று(04) இலங்கைத் திரு நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு காலிமுகத்திடலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். காலிமுகத்திடலில் நேற்று ஏற்பாடாகியிருந்த சுதந்திரதின வைபவத்திற்கு ஜனாதிபதி தம்...

யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சைவ மாநாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சைவ மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மெய்ப்பொருள் காண்பது அறிவு எனும் மகுட வாசகத்தை கருப்பொருளாகக் கொண்டு விளங்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது அனைத்துலக சைவமாநாடே எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். இந்து நாகரீகத்துறையினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்மாநாடு 12...

இன்று முதல் நடைமுறைக்கு வரும் யாழ் கொழும்பு யாழ் புகையிரத சேவை நேர அட்டவணை

யாழ் -கொழும்பு புகையிரத சேவை ........................... 1. இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி ........................... புறப்படல் காலை 6.10 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 1.05 மணி 2. யாழ்தேவி புகையிரதம் ................. புறப்படல் காலை 9.35 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 6.35 மணி 3. குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை .......................... புறப்படல் பிற்பகல்...

ஸிகா வைரஸ் : இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்

ஸிகா வைரஸ் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்ற போதிலும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது. ஈட்ஸ் என்ற ஒரு வகை நுளம்புகளினாலேயே இந்த நோய் பரவுகின்றது. தலைவலி, தசைப்பிடிப்பு, கால் வீக்கம், கண்களைச் சுற்றி வலி போன்ற நோய்க் குணங்கள் தொடர்ச்சியாக...

சுதந்திர தினம் ; சமூகவிரோத கைதிகள் விடுதலை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு மறுப்பு

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சில சமூகவிரோத கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையில், இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய உத்தேசிக்கப்பட்டுள்ள சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை...

கெஹெலிய வாக்குமூலம் அளிக்கவில்லை

2011ஆம் ஆண்டு காணாமற்போன, முன்னணி சோசலிசக் கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை தொடர்பில், யாழ்;ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்ட முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் நேற்று வருகை தராத காரணத்தினால், இந்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதிக்கு...

சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் த.தே.கூட்டமைப்பு பங்கேற்பு!

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாடம் இன்று வியாழக்கிழமை காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று காலை காலிமுகத்திடலில்...

இறுதிப்போரில் பங்காற்றிய ‘மிக்27’ போர் விமானங்கள் சுதந்திர தின அணிவகுப்பிலிருந்து நீக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில் முக்கிய பங்காற்றிய மிக்27 விமானங்களோ, எம்.ஐ.24 தாக்குதல் உலங்கு வானூர்திகளோ சுதந்திர தின அணிவகுப்பில் இன்று பங்கேற்காது. இந்தத் தகவலை விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் உறுதிப்படுத்தினார். இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலிமுகத்திடலில் இன்று பிரமாண்டமான முறையில்...

அனைத்து மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலில் தொடர்ந்தும் பயணிப்போம்!

எமது எல்லா மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு சமூக, அரசியல் சூழலை உருவாக்கும் இப்பாதையில் தொடர்ந்தும் பயனிக்க நாம் உறுதியோடு உள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (04) நாட்டின் அனைத்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டே ஜனாதிபதி இவ் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார். மேலும் இவ்...
Loading posts...

All posts loaded

No more posts