கூத்தாடி குறுந்திரைப்படம் வெளியீடு!

அம்பலம் திரைக்கூடத்தின் ‘கூத்தாடி’ குறுந்திரைப்படம் கடந்த திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வெளியிடப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளியீட்டுரையை ச.இராகவனும், மதிப்பீட்டுரையை ந.மயூரரூபனும் நிகழ்த்தினார்கள். பாரம்பரிய கலைஞர்களின் வாழ்வியலை பேசும் இந்தக் குறுந்திரைப்படத்தை தர்சனின் ஒளிப்பதிவிலும், ஸ்ரீ நிர்மலனின் இசையிலும், ஸ்ரீ துஷிகரனின் படத்தொகுப்பிலும், பிரதேசக்...

பருத்தித்துறை கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு! மற்றொருவரைக் காணோம்!!

பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் காணாமற்போயுள்ளார். இச்சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக் காரணமாக இவர்களின் படகு கவிழ்ந்துள்ளது. இதில் ஒருவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டார். ஒருவர்...
Ad Widget

புலிகளின் ‘பிஸ்டல் அணி’ துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் 'பிஸ்டல் அணியினர்' பயன்படுத்திய இரு கைத்துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். செவனகல பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக நடத்திய விசாரணைகளின் பிரகாரமே இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து தப்பிவந்து பின்னர் சட்டபூர்வமாக அதிலிருந்து விலகியவர் (வயது 45 ) என்று பொலிஸார்...

எண்ணெய் விலை சலுகை மக்களுக்கு வழங்க வேண்டும்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அதன் பிரதிபலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே, எண்ணெய் விலை அதில் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய்...

வித்தியா படுகொலை சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேக நபர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார். நேற்றய தினம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார். மேலும் புங்குடுதீவு மாணவியின்...

எம் அடையாளங்கள் பறிக்கப்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டுள்ளோம் – வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன்

எமது அடுத்த சந்ததியில் எமக் கான அடையாளங்கள் அனைத் தும் பறிக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்தை உணர்ந்து கொண்டதன் காரண மாகத்தான் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். அதை சரியான முறையில் புரிந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத் திய நிபுணர் பூ.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின்...

பிரபாகரனும் மனைவியும் உயிருடன் உள்ளனரா?: புலிகளின் மூத்த தளபதி தயாமோகன் விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதிப் போரில் இருந்து தப்பி வெளிநாட்டில் அடைக்கலமாகியுள்ள அந்த இயக்கத்தின் மூத்த தளபதி தயாமோகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை...

நாடு முழுவதிலும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியம்?

வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப மாற்றநிலை காரணமாக இன்று (28) நாட்டின் அனைத்து பாகங்களிலும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் வடக்கு கிழக்கு வடமத்திய தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை...

யாழில் அருள்நெறி விருது வழங்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அருள்நெறி விழா எனும் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த நல்லூர் கந்தசுவாமி ஆயலத்தின் திருவிழா உற்சவ காலத்தின் போது யாழ் மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களிடையே சமயம் சார்ந்த போட்டிகள் நடாத்தப்பட்டன. இவ்வாறு யாழ்...

பொலித்தீன் பாவனைக்கு ஜனவரி மாதம் முதல் தடை!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தடைசெய்யப்படவுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தினையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடனே இவ்வாறான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 மைக்ரோன்களுக்கு குறைவான கனவளவை கொண்ட பொலித்தீன் பொதிகள், பயன்பாட்டிற்கே எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது....

உலகில் ஆபத்தான வெடிக்காத வெடிபொருட்கள் உள்ள பிரதேசமாக முகமாலை

உலகில் மிகவும் ஆபத்தான வெடிக்காத வெடிபொருட்கள் உள்ள பகுதியாக யாழ்ப்பாணம் - முகமாலை பிரதேசம் உள்ளதாக மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவில் கடந்த 13 வருடங்களாக கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனம், அண்மையில் முகமாலை பிதேசத்தில் இரண்டு இலட்சம் மிதிவெடிகளை அகற்றியுள்ளது. இந்த நிறுவனத்தின் தகவலின்படி ஈராக்...

புங்குடுதீவு மாணவியின் கொலை : இன்றும் அறிக்கைகள் சமர்பிக்கப்படவில்லை

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் சான்று பொருட்களின் ஆய்வு அறிக்கையானது இன்று திங்கட்கிழமை (28) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை. சந்தேகநபர் ஒருவரின் இரத்த கறையுடன் கூடிய காற்சட்டையின் இரத்த மாதிரி மாணவியின் இரத்த மாதிரியுடன் ஒத்துப்போகின்றதா என்ற அறிக்கை, ஜின்டெக் நிறுவனத்தின் பரிசோதனை அறிக்கை, சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகக்...

யாழ்ப்பாணத்தில் தேங்காய் தட்டுப்பாடு

யாழ்ப்பாணத்தில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றமையால் தேங்காயானது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தேங்காய்கள் அவற்றின் அளவுக்கேற்ப 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையில் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. தேங்காய் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து கிளிநொச்சியின் பளை, தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தேங்காய் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகின்றது. மேலும்,தேங்காய் தட்டுப்பாட்டின் காரணமாக முட்டுக்காய்...

‘என்ரிக்’ இன் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு வருந்துகின்றோம்

கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் காண வருகை தந்திருந்தவர்களின் பணத்தை மீளவழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சிக்காக ரூபா 5,000 முதல் 50,000 வரை பெறுமதியான டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை இலங்கையின் ‘Live Events’...

சீனி மற்றும் பருப்புக்கு தட்டுப்பாடு ?

சீனி மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கப்படாத பட்சத்தில், இந்த பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக பட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தின் காரணமாக, இறக்குமதி செய்யப்படுகின்ற விலையைக் காட்டிலும், குறைந்த விலையில் உள்நாட்டில் சந்தைப்படுத்த வேண்டி ஏற்படுகிறது....

வித்­தியா படு­கொ­லையின் மர­பணு அறிக்கை இன்று சமர்ப்­பிக்­கப்­படும்?

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொலை தொடர்­பான மர­பணு அறிக்கை இன்­றைய தினம் வழக்கு விசா­ர­ணையின் போது மன்றில் சமர்ப்­பிக்­கப்­படுமென தெரியவருகின்றது. கடந்த மே மாதம் குறித்த மாணவி கூட்டு பாலியல் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். இது தொடர்பில் ஊர்­கா­வற்­றுறை பொலி ஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் கொலை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பெயரில் 9...

இராணுவத்தின் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது!

இலங்கை இராணுவத்தின் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் இவ்வாறு இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது. இணைய தளத்திற்குள் அத்து மீறி பிரவேசித்த ஒரு தரப்பு அரை மணித்தியாலம் இணைய தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இராணுவத்தின் உத்தியோகபூர்வ விபரங்களை மாற்றியதுடன் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின்...

கோணேஸ்வரம் கட்டுமானங்களுக்குத் தடை: கோவில் பரிபாலன சபை விளக்கம்

தொல்லியல் பாதுகாப்பு இடமான திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், அனுமதியின்றி நிர்மாணிக்கப்படும் சகல கட்டுமானங்களையும் உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநிறுத்துமாறு, கோணேஸ்வரம் கோவிலின் நிர்வாக சபைக்கு தொல்பொருளியல் திணைக்களம் பணித்துள்ளதாக கடந்த 18ஆம் திகதி செய்தி வெளியானது. இது தொடர்பில், கோவிலின் பரிபாலன சபை அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர...

கதிர்காமத்தில் யாத்திரிகர்களிடம் வியாபாரிகள் பகற்கொள்ளை!

நீண்ட விடுமுறை காலமாக கதிர்காமத்தில் என்றுமில்லாத அளவுக்கு யாத்திரிகர்கள் குவிந்துள்ளதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் தமது இஷ்டம்போல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளனர். சாதாரண அப்பம் 40 ரூபா (அரசாங்கம் நிர்ணயித்துள்ள உச்சபட்ச விலை 10 ரூபா) பிளேன்டீ 50 ரூபா, கருவாட்டுடன் கூடிய சாதாரண சாப்பாட்டுப் பார்சல் 250 ரூபா, ஓர் அங்குள உயரம்கொண்ட தயிருடனான...

தம்முடன் புகைப்படம் எடுப்பதை விரும்பாத இலங்கை ஆதிவாசிகள்!

'செல்பி' மோகம் பட்டிதொட்டியெங்கும் பரவிவருகிறது. எங்கு சுற்றுலா சென்றாலும் 'செல்பி' எடுப்பதற்கே பெரும்பாலானோர் ஆர்வம் காட்டிவரும் நிலையில், இந்த 'செல்பி' மோகத்துக்கு இலங்கையின் ஆதிவாசிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தங்களைப் பார்வையிடுவதற்கு வருபவர்கள் தமது வரலாறு, கலாசாரம் என்பவை பற்றி அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்றும், மாறாக, புகைப்படம் எடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றும் ஆதிவாசிகளின்...
Loading posts...

All posts loaded

No more posts