- Thursday
- August 6th, 2026
60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்த உற்சவம் நேற்று அதிகாலை தொடக்கம் மாலை வரை தொண்டைமானாறு வரையான பாக்குநீரிணை வங்காள விரிகுடா கடலில் இடம்பெற்றது. வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து சுவாமி எழுந்தருளி கடலில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது. சிம்மராசியில் குரு பகவானும் நிற்க,...
அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் தொடர்பில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஒரு பக்கத்திற்கு அதிக பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியதாகவும், எனினும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அர்ஜூன...
புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபர்கள் தாங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி தெரிவித்திருந்தனர். ஆனால், திங்கட்கிழமை (08) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 10 சந்தேகநபர்களும் முழுமையான தேக ஆரோக்கியத்துடன் மன்றுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டனர். தங்கள் வழக்கை துரிதப்படுத்த வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சந்தேகநபர்கள் கடந்த...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன், திருப்பலி ஆரம்பமாகின்றது. 21ம் திகதி காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத்...
முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தமக்கான வேலைவாய்ப்பைப் பெறுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவன தலைவர் மு.சர்வானந்தன் தெரிவித்துள்ளார். அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும், இவர்கள் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 12000 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு...
இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய போது, மயங்கி வீழ்ந்து, உயிரிழந்த மாணவி, சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமையாலேயே மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது. அம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சனிக்கிழமை(06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், யோகலிங்கம் அனோஜா (வயது 13) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் முதலில் அணி நடையில் ஈடுபட்ட பின்னர், தொடர்ந்து...
விபத்துக்கு உள்ளானவர் கடிதம் எழுதி தந்த பின்னரே சிகிச்சை அளிப்பேன் என ஊர்காவற்துறை பி.தர ஆதார வைத்திய சாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது , ஊர்காவற்துறை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தது. அதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் , துவிச்சக்கர...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்களில் 10ஆவது சந்தேக நபரை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்தார். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று திங்கட்கிழமை (08), பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மறுப்பு...
சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இதேவேளை இவருக்கு படையினர் நலன்புரிகள் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி...
“இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட AnanthaSangaree.போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக வெளியான செய்தி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில்...
தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே இருக்கின்றது. கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க...
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் மற்றும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் பற்றிய விபரங்களை திரட்டுவதற்காக செயலணி குழுக்களை நியமிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகால போரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான சரியான விபரங்கள் எதுவும் மதிப்பிடப்படவில்லை என்றும் அரசாங்கம் மேற்கொண்ட புள்ளிவிபரங்கள்...
யாழ்ப்பாணத்திற்கான புதிய இராணுவ கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க நேற்று தனது கடமைகளை பொறுபேற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று ஜெனரலாக நியமிக்கப்பட்டதை அடுத்து சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் செயற்பட்டு வருவது நாகரிகமான விடயம் அல்ல என ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாணசபை...
பண மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் இருக்கும் யோஷித உட்பட ஐவருக்கும் எதிராக மேலும் ஐந்து பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சி.எஸ்.என். தொலைக்காட்சி நிர்வாகம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே தற்போது யோஷித ராஜபக்ஷ கைதாகி உள்ளார். இவருக்கு எதிராக போலி ஆவணங்கள் தயாரித்தல், நம்பிக்கை மோசடி, பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம்...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சயீத் ரா அத் அல் ஹுசைன் நேற்று யாழிற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலத்தில் சந்தித்து கலந்துரையாட சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தின் வாசலில் காணாமல் போனோரின் உறவினர்கள் காத்திருந்தார்கள். வாகனத்தில் வந்த ஆணையாளர் பாதுகாப்பாளர்களை...
நான் அடுத்த தடவை வரும் போது, உங்களை சொந்த இடத்தில் தான் சந்திக்க வேண்டுமென விரும்புகின்றேன், என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து...
தற்போதைய காலத்தில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது, சர்வதேச அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தால் அவ்வளவு சரியென ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், சிரியாவிலும் அவ்வாறான பொதுமன்னிப்பு கொடுப்பது தவறு என தான் எடுத்துக் கூறியதாவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்ததாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, இவ்வாறான...
இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016 காலை யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காலை 9.30 மணியளவில் முதலமைச்சரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ் விசேட சந்திப்பில் வடக்கு முதல்வரால் தமிழ்...
Loading posts...
All posts loaded
No more posts
