- Friday
- November 21st, 2025
தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரானது என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக அவரிடம் வினவிய போதே வடமாகாண சபையில் வைத்து இவ்வாறு நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பேரவையானது, தமிழரசு கட்சிக்கோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ...
பிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான புதுவருடத்தினை அழுத்தம் மற்றும் அடக்குமுறையுணர்வின்றி சுதந்திரமான ஒரு சூழலில் புது வருடத்தை வரவேற்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பிறந்திருக்கும் புதுவருடத்தினை முன்னிட்டு வௌியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட பிரதமர், 2016 புது வருடமானது மக்கள் எதிர்பார்ப்புக்களை வெற்றியடையச்...
தமிழ் மக்கள் அவை தொடர்பில் இரா.சம்மந்தனுக்கு நான் தெளிவுபடுத்தினேன். எனது தெளிவுபடுத்தலுக்குப் பின்னர் மக்கள் அவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என சம்மந்தன் என்னிடம் கூறியுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு இது எரிச்சலூட்டினால் அதற்று நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் அவை...
வவுனியா மாவட்டத்தின் மூத்த பிரஜையாகிய சதாசிவம் ஐயா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் வேலாயுதம் சதாசிவம் செவ்வாய்க்கிழமை குருமண்காட்டில் உள்ள தமது குறிஞ்சி இல்லத்தில் இறைபதம் அடைந்தார். இறைவனடி சேர்ந்தபோது, அவருக்கு வயது 105. இந்த வயதிலும் முதுமையின் தளர்ச்சியுடன் தானாகவே நடமாடி, தனது தேவைகளைப் பூர்த்தி செய்து நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புபவர்களுக்கு ஓர்...
பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்துக்கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை மிரட்டிய ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - வடமராட்சி - பருத்தித்துறையில் புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் தனது அந்தரங்கப் படங்களை தனது கைத்தொலைபேசியில் உள்ள 'வைபர்' மூலம் அதே பகுதியில் வசிக்கும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் உணவகத்தில் மாணவர் ஒருவர் புதன்கிழமை வாங்கிய மதியச் சாப்பாட்டில் இரண்டு ஈக்கள் இருந்துள்ளன. மேற்படி உணவகம் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வருவதாக முன்னரே கூறப்பட்டிருந்தது. மேற்படி, உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (29) விற்பனை செய்யப்பட்ட றோல்ஸ் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக மாணவர்கள் கூறினர். இந்த உணவகத்தை, நடத்துவதற்கு...
இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் சில இடங்களில் மிதிவெடி அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளும் வலிகாமம் கிழக்கு வளலாய் பகுதியில் 233 ஏக்கர் காணிகளும் இராணுவத்தினரால் செவ்வாய்க்கிழமை (29) திடீரென விடுவிக்கப்பட்டன. இதனையடுத்து, நேற்று புதன்கிழமை, மக்கள் மிக ஆர்வமாக அந்த இடங்களைப்...
வட மாகாண சபை முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையை யாரும் எதிர்க்க வேண்டிய தேவையில்லை என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவோர் வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைத்துள்ள அந்தக் குழுவில், எந்தத் தவறும் இல்லை என, அவர்...
சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுப்பது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. தொல்பொருள் திணைக்கள பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பிரஷாந்த குணரத்ன குறிப்பிட்டுள்ளார். புகைப்படம் எடுக்கும் போது, ஏற்படும் பிளாஷ் ஔி (flash light) காரணமாக ஓவியங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக,...
இந்தியா - இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப் போவதாக பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன, எனினும் அது நடக்கப் போவதில்லை என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் சீபா ஒப்பந்தம் கையெழுத்திடப் போவதில்லை எனவும், பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு குறித்த...
உத்தேசிக்கப்பட்ட அரசியல் தீர்வில் தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் பூரணமாக நிறைவேற்றுவது குறித்தான முதலாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (30.12.2015) தமிழ் அரசுக்கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு எதிர்க்கட்சித்தலைவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று (30)இடம்பெற்றது. இந்தச்சந்திப்பு தொடர்ந்துமுன்னெடுக்கப்படும் என அறியவருகின்றது. சந்திப்பில் தமிழரசுக்கட்சி சார்பில் சம்பந்தன் சுமந்திரன் மாவை ஆகிய மூவரும்...
அண்மையில் வௌிநாட்டுப் பாடகர் ஒருவரை அழைத்து வந்து, இசை நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கவுள்ளதாக, கொழும்பு மாநகரசபை மேயர், ஏ.ஜே.எம்.முஸாம்மில் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியை, லைவ் இவன்ஸ் (Live Events) எனும் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த...
அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் உரிமைகளை, நலன்களை வென்றெடுப்பதற்காக மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் பேரவைக்கு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தமிழ் உறவுகள் வாழும் இடங்களிலும் பலத்த ஆதரவு கிடைத்து...
தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (30.12.2015) பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார்....
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில நேரங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய...
ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரை செவ்வாய்க்கிழமை (29) மாலை கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன், வீதியில் நின்றுகொண்டு பல நாட்களாக தாதி பெண்ணை நக்கலடித்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமை (28) பணிக்குச் செல்லும் போது, தாதியின் பின்னால் வந்த...
வட மாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 700 பேர் நியமிக்கப்படவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று புதன்கிழமை, வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...
இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த(உ/த) பெறுபேறுகள் , அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். முன்னர் இன்று பெறுபேறுகள் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
'எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை - ஒருபோதும் இணையோம்' என்ற தலைப்புடன் இன்று பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்- 'எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை - ஒருபோதும் இணையோம்'...
வலி.வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமுமே இவ்வாறு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. 25 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் நேரில் சென்று ஆவலுடன் பார்வையிட்டனர்....
Loading posts...
All posts loaded
No more posts
