- Thursday
- August 6th, 2026
இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் திலக்கரத்ன டில்சானுக்கு, கொழும்பு நீதிபதி நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினையொன்றுக்காக அவரது முதலாவது மனைவியினால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது டில்ஷான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதனையடுத்து பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டில்ஷான் வெளிநாட்டில் இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும், அவர்...
சரத் பொன்சேகாவின் படைகள் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவரை இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமையானது, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு நேர்மறையானது என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. சரத் பொன்சேகாவின் இந்த நியமனமானது பரந்தளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களை அரசாங்கம் பாதுகாக்கலாம்...
சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ, புதல்வர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும்...
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. முழங்காவில் பிரதான பேரூந்து நிலையத்தை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில்...
யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக 9ஆவது தேசிய சாரணர் ஜம் போறி எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 5 நாட்கள் நடைபெறவுள்ளது.வடமாகாண கல்வி அமைச்சில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் சாரணியர் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெறுவதனை முன்னிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி...
இவ் வருட ஆரம்ப கட்டத்திலேயே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 26 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என, சுகாதார அமைச்சின் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்புப் வேலைத் திட்டப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் எயிட்ஸ் பரவுவது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொழும்பு...
அரசியல் கைதிகளுக்கு எப்படியாவது தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலர் முயற்சிப்பதாக, அரசியல் கைதிகள் விவகாரங்களை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றின் நீதிபதி ஐராங்கனி பெரேராவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிணை வழங்கப்பட்ட 14 அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் தொடர்பில் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்து...
நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார். “30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாகதீபவில்...
எமது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தி, அதனை அனுபவித்து வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி முழங்காவில் பிரதேசம் ஒரு சிறந்த...
யாழ்ப்பாணம் மீசாலை இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததுடன், மற்றுமொரு இராணுவ சிப்பாயைச் சுட்டுக்கொல்ல முயற்சித்தமைக்காக இராணுவ புலனாய்வு பிரிவைச் இராணுவ கோப்ரல் ஒருவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார். அத்துடன் 20 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டப் பணம் செலுத்தத் தவறினால்...
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் கிறிஸ்ஞானந்தராஜா மற்றும் கஜன் மாமா ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா...
சர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடனேயே போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற சரத் பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதை வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களினது பங்களிப்பும், ஆலோசனைகளும் அவசியானது. இராணுவத்தினருக்கு...
இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில்...
ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாராளுமன்ற அமர்வுகளின் போது, அரை மணிநேரம் பிரதமரிடம் நேரடியாக உறுப்பினர்கள் தமது கேள்விகளை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
வடமாகாண தொண்டர் ஆசியர்களை, ஆசிரியர்கள் நியமனத்துக்குள் உள்வாங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தின் மூலம் மத்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் பிரமாணக் குறிப்பை மீறி எம்மால் எதுவும் செய்ய முடியாது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்தார். வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என கல்வி...
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(09) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர்...
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், மீண்டும் இலங்கைக்கு வருவேன் என்று கூறிவிட்டு, இன்று (10) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறினார். இன்று அதிகாலை 3 மணியளவில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கிப்...
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரை, குற்றப்புலனாய்வு பிரிவினர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைது கைதுசெய்துள்ளனர். அவ்விருவரும் சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அவ்விருவரையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் கருத்தறியும் செயலமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 15...
வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா, மடு ஆகிய கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவை பத்திரம்...
Loading posts...
All posts loaded
No more posts
