- Friday
- November 21st, 2025
இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளது தமக்கு தெரியவந்துள்ளது என இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். இதில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குவர் எனவும...
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முதியவர் மீண்டும் வெளிநாடு செல்ல மனமற்ற நிலையில் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொக்குவில் கிழக்கில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் கிழக்கு கல்லூரி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சபாபதி பாலசுப்பிரமணியம் (வயது 80) என்பவர் கடந்த வாரம் நியூசிலாந்து நாட்டில் இருந்து மனைவியுடன் தனது வீட்டுக்கு...
2015ம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை, கடந்த 2014ம் ஆண்டை விட 10,402 இனால் அதிகரித்துள்ளது. அத்துடன் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 1,705 இனால் அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணத் தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. கடந்த...
வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டின் பாதீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் 99.66 வீதம் செலவழிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்; இன்று ஞாயிற்றுக்கிழமை (03.01.2016) வெளியிட்டிருக்கும் அந்த ஊடக அறிக்கையில், வடக்கு மாகாணசபையின் 2015ஆம்...
தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதால், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்தி அதில் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் முரளிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாள்வதற்கு சகல தமிழ் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், திடீர் மாரடைப்பு காரணமாக, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் செய்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ...
இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 29 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அதன் மூலம் இம்முறை யாழ்மாவட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னணி வகிக்கின்றது. இப்பாடசாலையின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதுவரை பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை முடிவுகளின்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் நிலங்களை கடற்படையினரின் தேவைக்காக கையகப்படுத்த அரசு எடுத்துள்ள முன்னெடுப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம் வட்டுவாகல் பகுதியில் அவ்வகையில் 617 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பில் உயர் அரச அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டமொன்றும் அங்கு சனிக்கிழமை...
வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான உபகுழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் 27ம்...
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ள 852 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பரீட்சைத் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன. 219 வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலமாகவும் 515 வெற்றிடங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மூலமாகவும், 118 வெற்றிடங்கள் இலங்கை அதிபர் சேவையில் உள்ளவர்களில் சேவை மூப்பு மூலமாகவும் நிரப்பப்பட உள்ளது. கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு அந்த...
வங்கிகளில் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் வைப்புக்களை அரசுடமையாக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே வங்கிகள் சட்டத்தில் காணப்படும் ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார். 10 வருடங்களுக்கு அதிக காலம் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் பணம் இந்த சட்டத்தின்படி மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்...
12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவை ஏற்க முடியாது என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகளுக்குப் பதிலாக நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும், அகதி வாழ்க்கை வாழும் மக்களுக்கு நிரந்தர இல்லமும் வழங்குவதே அவசியம் என்றும்...
015 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ள நிலையில் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளமான www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நாளைய தினம் வெளியிடப்படவுள்ள பரீட்சைப் பெறுகள் அனைத்தினையும் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதோடு தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் அனைத்தினையும் அவர்களின்...
வடக்கு, கிழக்கில் 11 000 வீடுகள் அமைக்கப்பட்டு 32 முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு 6 மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். விரைவில் செய்து முடிக்க வேண்டிய பல கட மைகள் எமக்கு உள்ளன. அவற்றில் பிரதானமாக வடகிழக்கு மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு சிறந்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான சிகிச்சையியற் துறைக்கான கட்டடம் அமைப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காணியில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னமும் கட்டடம் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இணைந்து இக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினர். கட்டடப் பணிகள் இன்னமும்...
சாவகச்சேரி தனங்கிளப்புச் சந்தியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மோதி ஏற்பட்ட விபத்தில் வெள்ளிக்கிழமை (01) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர். தனங்கிளப்பைச் சேர்ந்த இராசதுரை (வயது 28) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் சங்குப்பிட்டியிலிருந்து தனங்கிளப்பை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ்விபத்து...
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நாம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் பொருளாதார வலயங்களையும் எதிர்பார்த்து இருக்கின்றோம். இவற்றை நிறைவேற்றுவதற்கான காலம் இப்போது கிட்டியுள்ளது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக...
தமிழ்த் தேசியத்துக்காக அயராது தொடர்ந்து உழைக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை உடல் நலக் குறைவால் ஓய்வு பெறவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரின் இடத்துக்கு நால்வரைத் தெரிவு செய்து அவர்களின் பெயர்களை திருத்தந்தை பிரான்சிஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் வண.ஜோசப்...
வடக்கு, கிழக்கிற்கும் மலையகத்திற்கும் இன்று முதல் உறவுப் பாலம் ஏற்படுத்தப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு மேசையில் மலையக மக்கள் சார்பான கட்சியும் இடம்பெற வேண்டும். இவற்றுக்கான ஆரம்ப கட்டமாக இன்று அமரர் சந்திரசேகரனின் 6 ஆவது சிரார்த்த தினம் திகழ வேண்டும்.இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
