Ad Widget

டெங்கு நுளம்பு ஒழிப்பு கரவெட்டியில் துாிதம்

கரவெட்டி பிரதேச செயலகமும் பிராந்திய சுகாதாரத் திணைக்களமும் இணைந்து கரவெட்டிப்பகுதியில் டெங்கு நுளம்பை அழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

வடமராட்சியின் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இமையாணன், இமையாணன் மேற்கு உடுப்பிட்டி, துன்னாலை துன்னாலை தெற்கு பகுதிகளில் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிலர் இனங்காணப்பட்டதை அடுத்து இப்பகுதிகளில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று இப்பணி இமையாணன், இமையாணன் மேற்கு மற்றும் உடுப்பிட்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. கரவெட்டிப் பிரதேச செயலகமும் கரவெட்டிப் பிராந்திய சுகாதார திணைக்களமும் இணைந்து இந்த டெங்கொழிப்பு செயற்றிட்டத்தை மேற்கொண்டுள்ளன.

இப்பணியில் செயலக அலுவலர்கள் சுகாதாரத் திணைகக்கள அலுவலர்கள் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் நெல்லியடிப் பொலிஸார் அபிவித்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்குபற்றினர்.

இப்பணி இன்று செவ்வாய்க்கிழமை துன்னாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

Related Posts