மன்னார் ஆயர் – வடக்கு முதல்வர் சந்திப்பு

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும், இது குறித்து வடக்கு முதல்வரிடம் வினவியபோது, ஆயரின் நலம் குறித்து விசாரிக்கவே அவரைச் சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அண்மையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இல்லம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts