Ad Widget

அரசின் செயற்பாடுகளுக்கும் ஜனாதிபதிக்கும் ஐ.நா செயலாளர் பாராட்டு

இலங்கையில் அரசியல் மற்றம் ஒன்றை ஏற்படுத்தி முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்டபான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்நாட்டு மக்களுக்கு நீண்ட கால அமைதி, நிலையான தன்மை மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட, விரிவான சீர்திருத்தப்பட்ட வேலைத்திட்டத்திற்கான அரசின் அர்ப்பணிப்பை ஐ.நா செயலாளர் மதிப்பதாக தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியை ஏற்படுத்துதல் மற்றும் பலமிக்க சகவாழ்வுக்காக கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் முன் வைக்கப்பட்ட யோசனைகளின் முதல் கட்டம் செயல்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்வதுடன் அதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் ஐநா செயலாளர் கூறியுள்ளார்.

நீண்ட கால அரசியல் தீர்வுக்காக நாடு பூராகவும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறைக்கு உதவியளிப்பதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான அரசின் முயற்சிகளை பாராட்டியுள்ள பான் கீ மூன் அதற்காக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts