புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்

நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் ஊர்காவற்றுறை பொலிஸார் எங்களை கைது செய்துள்ளனர் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஊடகவியலாளர்களிடம் கூறினர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அறிக்கைகள் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், சந்தேகநபர்களை எதிர்வரும்...

காணாமல் போனோரில் 48 பேருக்கு மட்டுமே இறப்புச் சான்றிதழ்

வட மாகாணத்தைச் சேர்ந்த காணாமற்போனோரில் 48 பேரின் இறப்புக்கள் மட்டும் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் நாயக அலுவலகத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருதி பதியுமாறும் அதன் மூலம் பெறப்படும் இறப்பு சான்றிதழை ஆவணமாக சமர்ப்பித்து போரில் இறந்தவர்களுக்கான நட்டஈட்டுத் தொகை மற்றும் நிவாரணங்களை பெற்றுக்கொள்ளுமாறும் அரச...
Ad Widget

முடி வெட்டச் சொன்ன ஆசிரியரை விக்கெட் பொல்லால் சரமாரியாக தாக்கிய மாணவன்

காலி பிரதேச பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், ஆசிரியரை விக்கெட் பொல்லுகளால் தாக்கியுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப் பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியரான அவர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்து விட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே...

இந்தியா எமது அயல் நாடு அதற்காக எங்கள் கடல்வளங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது- கடற்தொழில் அமைச்சர்

இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அரமவீர ஞாயிற்றுக்கிழமை (10) மீனவர் சங்கங்களின் பிரதிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது இந்திய மீன்பிடிப் படகுகளால் தமது கடல்வளங்கள் அழிக்கப்படுவதாகவும் தம்மால் தொழில் செய்ய முடியாதிருப்பதாகவும் யாழ்ப்பாண மீனவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். அவர்களிற்கு பதிளித்து உரையாற்றும் போதே அமைச்சர்...

போதைப்பொருட்கள் குறித்து அவதானமாக இருங்கள்! – மன்னாரில் முதலமைச்சர் அறிவுரை

அவசர உலகத்தில் திடீர் பணக்காரர்களாக வருவதற்கே விரும்புகின்றார்கள் இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். மன்னாரில் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப கூட கட்டடங்களை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சீரிய வாழ்க்கை முறை, ஒழுக்கம், வர்த்தகத்தின் உண்மைத்தன்மை, மார்க்கத்தின் வழிமுறை அனைத்தையுந் தொலைத்து விட்டு என்ன இழிதொழில் செய்தாவது திடீர் பணக்காரர்களாக...

கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் கிளிநொச்சியில்! – முக்கிய விவகாரங்கள் குறித்து ஆராயத் திட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா. சம்பந்தன் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் எதிர்வரும், 21ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல்...

விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த கலைமாணிக் கற்கை நெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க.பொ.த. (உயர்தர) பரீட்சை - 2013 அல்லது அதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்து இருப்பதுடன் பொதுஅறிவுப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 30...

உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தோரின் 42ஆவது நினைவுதினத்தையொட்டி யாழ். முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள நினைவாலயத்தில் இன்று(10) நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நினைவு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தனார். தொடர்ந்து வட மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், ஏ.பரஞ்சோதி ஆகியோர்...

மூத்த பத்திரிகையாளரும் சுடர்ஒளியின் முன்னாள் பிரதம ஆசிரியருமான கே.கே.ஆர். காலமானார்!

'சுடர்ஒளி' பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) (வயது 87) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் காலாமானார். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். தமிழ்ப் பத்திரிகை உலகில் சுமார் 60 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத்...

அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கான ஆதரவு வழங்க நோர்வே அரசு இணக்கம்!

அண்மையில் யாழ் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தயாராகவுள்ள என இலங்கைக்கான நோர்வே நாட்டு தூதுவர் Thorbjørn Gaustadsæther தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிடப்பிரதிநிதி ஜோர்ன் சொரேன்சென் (Joern Soerensen) க்கும் தூதுவருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த புரிந்துணர்வு...

மேலும் சில பட்டதாரிகள் அரசாங்க சேவையில்

மேலும் சில பட்டதாரிகளை அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் வைத்து, 2591 பேருக்கு இவ்வாறு பயிற்சியாளர்களுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களே இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இருபதுக்கு 20 போட்டியும் நியூஸிலாந்து வசம்

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான 20பதுக்கு இருபது போட்டியில், தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, 2-0 என தொடரையும் பறிகொடுத்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை 2-0 என நலுவவிட்டது. இதனையடுத்து ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு...

சட்டவிரோதமாக தாயகம் வர முற்பட்ட இலங்கை அகதி கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமான வர முற்பட்ட ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) எனும் இவர், கடந்த 2011ல் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தார் என தமிழன ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தநிலையில்...

யாழில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்

தற்போதைய அரசாங்கம் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கறுப்புக் கொடி ஏந்தி போராடவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 13ம் திகதி யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு எதிரில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமை,...

மன்னார் ஆயர் – வடக்கு முதல்வர் சந்திப்பு

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், இது குறித்து வடக்கு முதல்வரிடம் வினவியபோது, ஆயரின் நலம் குறித்து விசாரிக்கவே அவரைச் சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அண்மையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிகன் மனம் திறக்கிறார்

அரசியல் கைதிகள் உருவாக கடந்த கால அரசியல் தலைமைகளே காரணம். அரசியல் தலைமைகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அரசியல் கைதிகள் உருவாகி இருக்க மாட்டார்கள் என ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிகன் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிகன், கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி அரசியல் கைதிகளை...

தொடரும் அபாய எச்சரிக்கை !! : மீள் குடியேறுவதில் மக்கள் அச்சம்!!

வலிவடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதிகளில் வெடிப்பொருட்கள் இருப்பதற்கான அபாய எச்சரிக்கை காணப்படுவதால் மக்கள் குடியேறுவதில் அச்சம் வெளியிடுகின்றனர். அத்துடன் இராணுவத்தினர் அமைத்திருந்த பதுங்கு குழிகள் மற்றும் மண் மூட்டைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பு அரண்கள் போன்றனவும் அகற்றப்படாமல் இருப்பதால் அவற்றிலும் வெடி பொருட்களின் அபாயம் இருக்கலாம் என கருதி...

இராணுவ வீரரின் சடலமா? விஸ்வமடுவில் திடீர் அகழ்வு!

விஸ்வமடு பகுதியில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் முல்லைத்தீவு பதில் நீதவான் பரஞ்சோதியின் அனுமதியோடு இராணுவ வீரரின் சடலம் என சந்தேகித்து அகழ்வு நடைபெற்று வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படியே அகழ்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது. நிட்டம்புவ அல்கம பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவ சிவில் படைப்பிரிவில் விஸ்வமடுவில் கடமையாற்றி...

இரண்டாம் மொழி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வடமாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள மும்மொழிக் கற்கை நிலையத்தினால் நடாத்தப்படும் இரண்டாம் மொழி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையத்தினால் நடத்தப்படும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் இரண்டாம் மொழி சித்தியடைய வேண்டிய அரச அலுவலர்கள், மூன்றாம் நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள், பாடசாலையில்...

ஹிருனிகா பிணையில் விடுதலை

இன்று காலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக...
Loading posts...

All posts loaded

No more posts