இலங்கை கண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சி

19வது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட சில விடயங்களில் இலங்கை அண்மைக் காலங்களில் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பலவந்தமாக காணாமல் செய்தல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பிரதிநிதிகள் குழு, ஐரோப்பிய சங்கத்தின் நிர்வாகிகள், மனித உரிமைகள் தொடர்பிலான செயற்குழு உள்ளிட்டோருக்கு இடையிலான முதலாவது சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் வௌிவிவகார அமைச்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Posts