- Friday
- November 21st, 2025
முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர் பிரிவின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமை அகற்றி, அந்தக் காணிகளை மக்களுக்கு வழங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரேரணையொன்று, வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது....
பட்டதாரி பயிலுனர்கள் 2592 நியமனம் வழங்கும் நிகழ்வு பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நேற்று காலை 9.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற்றது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கே இந்நியமனம் வழங்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர், நியமனங்கள் பெற்ற உத்தியோகத்தர்கள்...
அனைவர் மத்தியிலும் விளையாட்டினை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அரசாங்கம் நாடு முழுவதிலும் விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு...
தனியார் துறை ஊழியர்களுக்கு 3500 ரூபா சம்பள உயர்வை வழங்கும் வகையில் சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று(12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. இதன்போது மேற்படி பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்...
போன் செய்த 15 நிமிடங்களில் வீடு தேடிவரும் பீட்ஸாவின் பின்னணியில் பாலின மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பீட்ஸாவில் உள்ள வெண்ணை போன்ற வழவழப்பான பொருட்கள் அவற்றை பேக்கிங் செய்து எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் கார்ட்போர்ட் பெட்டிகளின் வெளிப்பக்கத்தில் கசியாமல் இருக்க ஒருவகையான இரசாயனப்பூச்சு அட்டைப் பெட்டிகளில் பூசப்படுகிறது. அவ்வகையிலான அட்டைப்...
இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு முக்கியமானது என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு ஏற்படுத்துவது தொடர்பில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட யோசனை பற்றிய விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஒரு தேசிய தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில்அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்புக்கு...
கனகராயன்குளம் பகுதியில் விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது வனஇலாக அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் கோடரிகளையும் பறித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனகராயன்குளம், மன்னகுளம் காட்டுப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் போரின் போது தமது கணவன்மாரை பறிகொடுத்த நான்கு விதவைப் பெண்கள் தமது...
நல்லூர் கல்வி கோட்டத்துக்குட்பட்ட இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டமைக்கு வடமாகாண சபையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது, நல்லூர் ஆனந்தா வித்தியாசாலை மற்றும் நல்லூர் ஞானோதயா வித்தியாலயம் ஆகியவை மூடப்பட்டமை தொடர்பில் விவாதம் இடம்பெற்றது. இதன்போது, கருத்துத் தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர் க.சர்வேஸ்வரன்,...
கரவெட்டி பிரதேச செயலகமும் பிராந்திய சுகாதாரத் திணைக்களமும் இணைந்து கரவெட்டிப்பகுதியில் டெங்கு நுளம்பை அழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வடமராட்சியின் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இமையாணன், இமையாணன் மேற்கு உடுப்பிட்டி, துன்னாலை துன்னாலை தெற்கு பகுதிகளில் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிலர் இனங்காணப்பட்டதை அடுத்து இப்பகுதிகளில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை...
வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட மயிலிட்டி இறங்குதுறையில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வர்த்தகர்கள் கடற்படையினரின் உதவியுடன் பொருட்களை இறக்குமதி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த இறங்குதுறை காணப்படுதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் மயிலிட்டி பகுதியைச்...
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இடம் பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசாவினா...
எதிர்வரும் 15ஆம் திகதி பொங்கல் தினத்துக்கு முன்னதாக 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (11) மாலை நேரில் சென்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பிரதான பாடசாலைகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த வெட்டுப் புள்ளிகளை ஒரு புள்ளியால் குறைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் காரணமாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் சேர்வதற்கற்கான வாய்ப்பு கிடைக்கும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்...
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சில பேக்கரி உரிமையாளர்கள் பான் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என, அச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அண்மையில் கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளாக செய்திகள் வௌியாகின. எனினும் கோதுமை...
கோப்பாய் - இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன் பலியாகியுள்ளதோடு, அவரது 21 வயதான காதலி உயிர்தப்பியுள்ளார். திங்கட்கிழமை (11) மாலை வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், உறவினர்களால் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து...
துபாயில் ஆளில்லாத வீடுகளில் நுழைந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை துபாயின் அல் பார்ஷா (Al Barsha) பகுதியிலுள்ள ஆடம்பர வீடொன்றில் கொள்ளையர்கள் புகுந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்த வேளை, 250,000 திர்ஹாம் பெறுமதியான கடிகாரங்கள் மற்றும் 100,000 திர்ஹாம் பணம்...
அனைத்து பேக்கரி தயாரிப்புக்களினதும் விலைகளையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வரிகள் காரணமாக அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளமையினால் பேக்கரி தயாரிப்புக்களினதும் விலையையும் அதிகரிக்க நேரிட்டுள்ளதாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்ந்தன குறிப்பிட்டார். இதனடிப்படையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் பனிஸ் ஒன்றின்...
வட மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறுகின்ற குழுக்கூட்டத்தில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் 4 அமைச்சர்களும் கலந்துகொள்வதில்லை. இனிவரும் கூட்டங்களில் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். வடமாகாண சபை அமர்வுக்கு முன்னதாக நடைபெறும் குழுக்கூட்டம் வடமாகாண சபையில் திங்கட்கிழமை (11) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அவைத்தலைவர்...
இலங்கைக்கு தற்போது எந்தவொரு எதிரி நாடுகளும் இல்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகிலுள்ள அனைத்து நாடுகளிடமும் இலங்கை தற்போது நட்புக் கரம் நீட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, ஜனாதிபதி இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
யாழ்.செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திருமதி சாந்தினி மாணிக்கத்தின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. குறித்த பாடசாலை அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னமும் 3 வருடகாலம் உள்ளது. எனினும் அவருக்கு இடமாற்றம் கிடைத்துள்ளதால் அவர் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார். ஆனால் குறித்த...
Loading posts...
All posts loaded
No more posts
