- Saturday
- November 22nd, 2025
பாடசாலைகளில் கல்வி பயிலும் ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டு நிகழ்ச்சியிலாவது பங்குபற்ற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்து பாடசாலைகளிலும் கட்டாய பாடமாக உள்ளடக்கப்படுவதோடு ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டிலேனும் பங்குபற்றி...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி மோசடி விசாரணைப் பிரிவு அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட கூடும் என தெரியவருகிறது. நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதற்கு தேவையான சாட்சியங்கள் தேவைக்கு மேலதிகமாக தயாராக இருப்பதாகவும் இதனை அரசியல் பிரச்சினையாக காட்டி அரசியல்...
போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்துள்ள மேஜர் ஜெனரல் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது இராணுவத்தினர் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் போர் விதிகள் கடுமையாக மீறப்பட்ட நிலையிலேயே புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் வெற்றிகளைப் பெற்றிருந்தனர். இதன் காரணமாக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கவிருந்த மயில் மாளிகையின் நீச்சல் தடாகம் மண் இட்டு மூடப்பட்ட போது, அதற்குள் தங்கங்களும் பணமும் சேர்த்துப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் குறித்து விசாரணைகளை நடத்துமாறு, அம்மாளிகையின் உரிமையாளரான ஏ.எஸ்.பி.லியனகே, பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி, தனது நற்பெயரைக் காக்குமாறு மயில்...
திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு அதிகாரியாக சேவைபுரிந்த கடற்படை சிப்பாயின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் வீட்டுத் தொலைபேசிகளுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் வைத்து கடற்படை ஏற்றுக்கொண்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளில் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை நீதிமன்றத்தில் வைத்து கடற்படை...
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டும் சிரேஷ்ட தலைமைப் பண்புகளை எடுத்துக்காட்டும் மனப்பாங்கு தொடர்பாக இலங்கை மாத்திரமன்றி இந்திய அரசும் இந்திய மக்களும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜயசங்கர் குறிப்பிட்டார். இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுப் பட்டமளிப்பு விழாவில்...
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன பாராளுமன்றில் அனுமதி பெறும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறித்த வரிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழ ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் முல்லைத்தீவு பழம்பாசிக் கிராமத்தில் பழங்களைப் பொதிசெய்யும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11.01.2016) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். விவசாய அமைச்சு முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பழச்செய்கையை ஏற்றுமதி நோக்கில் ஊக்குவித்து வருகிறது. இளைஞர்களை ஒருங்கிணைத்து இளைஞர் விவசாயக் கழகம் உருவாக்கப்பட்டு, அதனூடாகப்...
இன்று (13) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையை ஒரு ரூபாவினால் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (12) இடம்பெற்ற சங்கத்தின் கலந்துரையாடலை அடுத்தே இம் முடிவு எடுக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். அதன்படி, தற்போது ரூபா 54 ஆக...
தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது பணம் அல்லது நன்கொடை தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களென யாராவது கேட்டால் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணம் அல்லது நன்கொடை ஆகியவற்றின் ஊடாக பெற்றோரிடம் இலஞ்சம் வாங்கும் சகலருக்கும் எதிராக தமது சங்கம், நீதிமன்ற...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவுச் செயலாளர் எஸ்.ஜெயசங்கர் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்று காலை கொழும்பில் சுமார் ஒரு மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு குறித்து பிரதானமாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதற்கு மேலதிகமாக...
யாழ்ப்பாணம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வறுமைக் குறைப்பிற்கான ஐப்பானிய நிதியம் என்பனவற்றின் நிதியுதவியுடன் நெடுந்தீவு மக்களின் குடிநீர் தேவையினை நிறைவு செய்யும் முகமாக கடல் (உவர்) நீரை நன்னீராக்கும் திட்டத்தின் பின்னோக்கிய பிரசாரணம் (Reverse Osmosis) முறையிலான இரண்டு பொறிகளை அமைத்து வெற்றி பெற்றுள்ளனர். நெடுந்தீவு பிரதேசம்...
எனது மகன் 1997ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் கடந்த 2015ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டனர். காணாமற்போனமை உண்மையா என அயலவர்களையும் விசாரித்துச் சென்றனர் என்று காணாமற்போன கணேஷ் கருணாரட்ணம் என்பவரின் தாய் ரேவதி தெரிவித்தார். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று புதன்கிழமை நடைபெற்ற கறுப்புக்கொடி போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர் எம். ஏ. சிவாஜிலிங்கம் தலைமையில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று புதன்கிழமை முற்பகல் யாழ்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனப்படுகொலை போர் குற்றங்கள் ஆகியவற்றிற்கு எமக்கு நீதி...
யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று புதன்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை நோக்கி பேரணியாக செல்கின்றனர். மாலபேயிலுள்ள தனியார் மருத்துவ கல்லாரியை மூடுமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ”அரசியலில் கல்வி வேண்டும், கல்வியிலேயே...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையானது அப்பகுதியை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது ஜனாதிபதி பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பகுதியை படைமுகாம்கள் அற்ற பகுதியாகக் காட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சியா என பொதுமக்கள்...
யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. யுத்தத்தின் போது பாலியல் வன்கொடுமைகள் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி நியூயோர்க்கில் இந்த பிரகடனம் அறிமுகம் செயப்பட்டது, இதில் 122 உறுப்பு நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்த பிரகடனத்தில் நேற்று வரை...
ஆறு மாதமேயான சிசுவை, அச்சிசுவின் தந்தை, நிலத்தில் தலைகீழாக அடித்து கொலைச் செய்த சம்பவமொன்று திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ்பரி கீழ்ப்பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தாய்க்கும் -தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பச்சண்டையை அடுத்தே, பால்குடித்து கொண்டிருந்த பெண் சிசுவை, பறித்து நிலத்தில் அடித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
மிதிவெடிகளுடன் காணப்படும் மீதமுள்ள காணிகளின் 64 சதுர கிலோமீற்றர் அளவான நிலப்பரப்பு, முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை இரண்டு வருட காலப்பகுதிக்குள் அகற்றுவது தொடர்பாக, ஹலோ ட்றஸ்ட் அரச சார்பற்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள திட்டம் தொடர்பில் விசாரணை செய்யும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இரண்டு...
Loading posts...
All posts loaded
No more posts
