Ad Widget

உயி­ருடன் இருக்­கின்­ற­னரா? இல்­லையா? 12 மாதங்­களில் தீர்­வு!!

காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் செயற்­பாட்­டுக்­கா­லத்தை இன்னும் 12 மாதங்­க­ளினால் அர­சாங்கம் நீடித்தால் 20 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட காணா­மல்­போனோர் தொடர்­பான முறைப்­பா­டு­க­ளுக்கு நாங்கள் நிச்­சயம் தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுப்போம்.

அதற்­கேற்­ற­வ­கையில் தேவை­யான திட்­டங்கள் எம்­மிடம் உள்­ளன என்று ஆணைக்­கு­ழுவின் தலை­வரும் ஓய்வு பெற்ற நீதி­ப­தி­யு­மான மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார்.

நாங்கள் திரு­கோ­ண­ம­லையில் காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும் அமர்­வு­களை நடத்­தும்­போது அங்கு இருப்­ப­தாக கூறப்­படும் இர­க­சிய முகாம்­களைப் பார்­வை­யிட இருக்­கின்றோம். இது தொடர்பில் நீண்ட விசா­ர­ணையை மேற்­கொள்­வ­தற்கும் எமது ஆணைக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது எனவும் பர­ண­கம குறிப்­பிட்டார்.

மேலும் காணா­மல்­போனோர் தொடர்பில் எம்மால் நிச்­சயம் தீர்வை வழங்க முடியும். அதா­வது காணா­மல்­போனோர் இறந்­து­விட்­ட­னரா? அல்­லது உயி­ரோடு இருக்­கின்­ற­னரா? அவர்கள் எங்கு வைத்து யாரால் அழைத்து செல்­லப்­பட்­டனர் ? போன்ற விப­ரங்­களை நிச்­சயம் நாங்கள் 12 மாதங்­களில் காணா­மல்­போ­னோரின் உற­வு­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுப்போம் எனவும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக்ஸ்வல் பர­ண­கம சுட்­டிக்­காட்­டிக்­காட்­டினார்.

காணா­மல்­போனோர் தொடர்­பான விவ­காரம் நாட்டில் தற்­போது பாரிய சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அது தொடர்பில் கடந்த 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து விசா­ரணை நடத்தி வரும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் எதிர்­கால செயற்­பா­டுகள் எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றன என்­பது குறித்து வின­வு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

மெக்ஸ்வல் பர­ண­மக இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்:-

காணாமல் போனோர் குறித்து விசா­ரணை நடத்தும் ஆணைக்­கு­ழுவின் செயற்­பாட்­டுக்­காலம் தற்­போது நிறை­வ­டைந்­துள்­ளது. இந்­நி­லையில் எமது செற்­பாட்­டுக்­கா­லத்தை மேஞலும் 12 மாதங்­க­ளுக்கு நீடிக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறோம்.

அதன்­படி இன்னும் இரண்டு வாரங்­களில் காணா­மல்­போனோர் குறித்து விசா­ரணை நடத்தும் ஆணைக்­கு­ழுவின் செயற்­பாட்­டுக்­காலம் நீடிக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கிறோம். ஜனா­தி­பதி தற்­போது அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்பில் பாரிய வேலைப்­ப­ளு­வுடன் இருக்­கின்றார். எனவே அவர் இன்னும் சில தினங்­களில் எமது ஆணைக்­கு­ழுவின் செயற்­பாட்­டுக்­கா­லத்தை நீடிப்­ப­தற்­கான ஆணையை வழங்­குவார்.

ஆணைக்­கு­ழுவின் செயற்­பாட்­டுக்­காலம் நீடிக்­கப்­பட்­ட­வுடன் முதலில் யாழ்ப்­பா­ணத்தில் விசா­ரணை அமர்­வு­களை நடத்­த­வி­ருக்­கின்றோம். அதன் பின்னர் கிழக்கு மாகா­ணத்­திலும்இ விசா­ரணை அமர்­வு­களை நடத்­த­வி­ருக்­கிறோம். குறிப்­பாக கிழக்கு மாகா­ணத்தில் விசா­ரணை அமர்­வு­களை நடத்­தும்­போது திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் செயற்­பட்­ட­தாக கூறப்­படும் இர­க­சிய முகாம் குறித்தும் விரி­வான விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்கும் எதிர்­பார்க்­கிறோம்.

விசே­ட­மாக நாங்கள் குறித்த இர­க­சிய முகாம் எனக்­கூ­றப்­படும் முகா­முக்கு நேரில் சென்று அங்­குள்ள அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த எதிர்­பார்­கின்றோம். அத்­துடன் எமது விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் அங்கு அழைத்து சென்று நிலை­மை­களை ஆரா­யவும் திட்­ட­மிட்­டுள்ளோம். எமது ஆணைக்­கு­ழு­விற்கு இந்த இர­க­சிய முகாம் தொடர்பில் முறைப்­பாடு செய்தால் நாம் அங்கு செல்­வது இல­கு­வாக இருக்கும். இல்­லா­வி­டினும் நாங்கள் அந்த முகா­முக்க செல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்போம்.

இதே­வேளை எமது ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை இரத்து செய்­யு­மாறு ஐக்­கிய நாடுகள் சபை உள்­ளிட்ட சர்­வ­தேச அமைப்­புக்கள் கூறி­யுள்­ள­தாக அறி­கின்றோம். ஆனால் ஒரு விட­யத்தை இந்த இடத்தில் மிகவும் தெளி­வாக கூறு­கிறோம்.

அதா­வது காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் செயற்­பாட்­டுக்­கா­லத்தை இன்னும் 12 மாதங்­க­ளினால் அர­சாங்கம் நீடிக்கும் பட்­சத்தில் 20 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட காணா­மல்­போனோர் பிரச்­சி­னை­க­ளுக்கு நாங்கள் நிச்­சயம் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்போம். அதற்­கேற்­ற­வ­கையில் தேவை­யான திட்­டங்கள் எம்­மிடம் உள்­ளன என்­ப­தையும் இந்த இடத்தில் தெரி­விக்­கிறோம்.

அது­மட்­டு­மன்றி காணா­மல்­போனோர் தொடர்பில் எம்மால் நிச்­சயம் தீர்வை வழங்க முடியும். அதா­வது காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் பல்­வேறு மட்­டங்­களில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு தீர்­வு­களை வழங்க முடியும்.

அதா­வது காணா­மல்­போ­ன­வர்கள்இ இறந்­து­விட்­ட­னரா? அல்­லது உயி­ரோடு இருக்­கின்­ற­னரா? என்­பதை எம்மால் கூற­மு­டியும். ஒரு­வேளை இந்த இரண்டு முடி­வு­க­ளுக்கும் வர முடி­யா­விடின் அது தொடர்பில் மேல­தி­க­மாக செயற்­ப­டு­வ­தற்­கான தேவை­யையும் நாம் முன்­வைக்­கலாம்.

ஆனால் ஒரு குறிப்­பிட்ட விட­யத்தை நாங்கள் நிச்­ச­ய­மாக கூற­மு­டியும். அதா­வது காணாமல் போன­வர்கள் எங்கு வைத்து யாரால் அழைத்து செல்­லப்­பட்­டனர் என்ற விப­ரங்­களை நிச்­சயம் நாங்கள் 12 மாதங்­களில் காணா­மல்­போ­னோரின் உற­வு­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுப்போம் .

அத்­துடன் கடத்­தப்­பட்­ட­வர்கள் எங்கு வைத்து கடத்­தப்­பட்­டார்கள், யாரால் கடத்­தப்­பட்­டார்கள் என்ற விப­ரங்­களைக் கூட எம்மால் 12 மாதங்­களில் வெளிப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்கும். அந்த வகையில் நாங்கள் இவ்­வாறு காணாமல் போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்வை வழங்­கு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம்.

காணாமல் போன­வர்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்தும் நோக்கில் எமது ஆணைக்­கு­ழு­விடம் விசா­ர­ணை­யா­ளர்­களும் செயற்­பட்டு வரு­கின்­றனர். அவர்கள் சிறந்­த­மு­றையில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு தீர்­வு­களை வழங்­கு­வ­தற்கு எமக்கு துணை நிற்­பார்கள் என்றார்.

கேள்வி: காணாமல் போனோர் தொடர்பில் 20 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. அனைத்­திற்கும் தீர்வு வழங்க முடி­யுமா?

பதில்:- 12 மாத காலத்தில் அனைத்து முறைப்­பா­டு­க­ளுக்கும் நாங்கள் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்போம். ஆனால் தீர்­வுகள் பல்­வேறு மட்­டங்­களில் அமையும் என்­பதை மறந்து விடக்­கூ­டாது என்றார்.

கடந்த ஒக்­டோபர் மாதம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரேரணையில் இந்த பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகளை இரத்து செய்யவேண்டுமென கோரப்பட்டிருந்தது.

அத்துடன் இலங்கைக்கு கடந்த வருடம் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான செயற்குழுவின் பிரதிநிதிகளும் பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட வேண்டுமென கூறியிருந்தனர்.

இது இவ்வாறிருக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கவலையுடன் தெரிவிப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts