- Saturday
- November 22nd, 2025
கடும்போக்கு வாதிகள் வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். சிங்கள மக்களைப் போன்று ஏனைய இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார். யாழ்ப்பாணம் மருதனார் மடம் - இராமநாதன் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த...
தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பிரித்தானியா வின் வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தமிழ் மொழியில் தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவருடைய உரையில் இரண்டு தருணங்களில் தமிழ் மொழியை பிரயோகித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் யாழில் நேற்று நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் வைபவத்திலும் பங்கேற்றிருந்தார். இதன்போது...
அடுத்த ஆறுமாத காலப்பகுதியில் மேலுமொரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் மேலும் உரையாற்றுகையில், நீண்டகாலமாக தமிழ்மக்கள் சூரிய பகவானுக்கு நன்றிசெலுத்தும் முகமாக இந்நாளை...
2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன. கடந்த 2013ம் ஆண்டில் சிறந்த மாகாணமாக சபரகமுவ மாகாணமும், சிறந்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டமும்...
வல்வெட்டித்துறையில் தமிழ் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட பட்டப்போட்டியினை பார்வையிட பெருமளவில் மக்கள் திரண்டனர். குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் அலையென திரண்டமையால் வல்வெட்டித்துறை கடற்கரை நிரம்பி வழிந்தது. தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையினில் வித விதமான பட்டங்கள் போட்டியில் பங்குபற்ற வைக்கப்பட்டிருந்த நிலையினில் வடக்கு முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். சிறார்களினை தாண்டி வயது...
தேசிய பொங்கல் விழா இடம்பெற்ற ஆலயம் அமைந்துள்ள பலாலி பகுதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களின் இருப்பிடங்கள் என்பதால் இதனை நேரடியாக பிரதமரிடம் எடுத்துக்கூறவே தேசிய பொங்கல் விழா வழிபாட்டில் கலந்துகொண்டேன் என மாவை சேனாதிராசா தெரிவித்தார். பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தங்களுக்குள் இருந்த பகைமைகள் நீங்கி பேசிக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பரிவட்டம் கட்டி...
காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட வன்னியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளார். அம்பாள்புரம், வவுனிக்குளத்தைச் சோந்த சாள்ஸ் ஜெயந்தினி (வயது 25) என்பவர் காய்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 13ஆம் திகதி இரவு மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக 14 ஆம் திகதி...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணுக்கான விலையை குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி 450 கிராம் பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 1ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. முன்னதாக கடந்த 13ம் திகதி முதல் பாண் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 55 ரூபாவாக உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று முதல்...
தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு. அது யாழ்ப்பாண நிகழ்வோ இந்து நிகழ்வோ அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார். உலக சுற்றுச்சூழலில் மாற்றங்கள் நிகழ்வது போன்று உலக...
இம்முறை தேசிய பொங்கல் தின நிகழ்வுகள் நேற்று (15) யாழ்ப்பாணத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றன. நேற்று காலை யாழ் பலாலியில் அமைந்துள்ள சிறி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க...
பாடசாலை மாணவரிடையே தேசிய இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிற்கான பொங்கல் நிகழ்வொன்று யாழ் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நேற்று (15) இடம்பெற்றது. வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் தலைவியுமான சந்திரிக்கா...
தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், சர்வமதங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கதே. 1960 களில் சர்வமத சம்மேளனத்தின் உப செயலாளராக நான் இருந்தேன். பிரதமர் டட்லி சேனாநாயக பிரதமராக இருந்த காலத்தில் எங்கள் சம்மேளனம் இதையே செய்தது....
பலாலி உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே ஜனாதிபதி இதில் கலந்துகொள்ளவில்லையெனவும் அதனையிட்டு அவர் கவலை தெரிவித்ததாகவும் தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய பொங்கல் விழாவையொட்டி, பாதுகாப்புக்கள் பலப்படுத்தபட்டு யாழ்ப்பாணத்தின் வீதிகளில்...
தமது செர்நத இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடிய நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:- இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது மனங்கனித்த தைத்...
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக ஓய்வு பெற்ற ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பதவி துறப்பை திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை தெரிவித்தார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர் நியமனம் தொடர்பாக...
தைத்திருநாளை முன்னிட்டு இந்திய மீனவர்கள் 55 பேர்கள் யாழ் ஊர்காவற்துறை, பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ப. ரமேஸ்கண்ணா இன்று தெரிவித்தார். இவர்கள் கடந்த மாதங்கள் அத்துமீறி வல்லைக்கடற்பகுதி,மற்றும் காரைநகர் கடற்பகுதி,நெடுந்தீவு கடற்பகுதி மற்றும் மாதகல் ஆகிய கடற்பகுதிகளின் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். கடற்றொழில் நீரியல் வளத்துறை...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தும் அதனை இந்த நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியவில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 30 அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளதுடன், அது கடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் காணப்பட்ட குறைந்த...
வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி புதிய நேர அட்டவணைகள் வருமாறு, கொழும்பு யாழ்பாணம் இடையில் சேவையில் உள்ள யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து காலை 05.50 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த...
யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகத்திலும் இணைய ரீதியில் விரைவாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பிரதேச செயலகம் மாத்திரம் அதனை தபால் மூலம் அனுப்பும் பழைய நடவடிக்கையை தொடர்ந்தும் பேணி வருகின்றது. சான்றிதழ்கள் தேவைப்படுபவர்கள், பிரதேச செயலகம் சென்று தங்கள் விண்ணப்பத்தைக் கொடுத்து உடனடியாக சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் முறையானது பிரதேச...
Loading posts...
All posts loaded
No more posts
