- Saturday
- November 22nd, 2025
இறுதிக் கிரியைக்கு தயாராக இருந்த சடலத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த 48 வயதுடைய கார்த்திகேசு தவராசா என்பவரின் சடலமே இவ்வாறு மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வவுனாவில் கடையொன்றில் சிப்பந்தியாக கடமையாற்றியுள்ளார். இவர் கடந்த 10ஆம் திகதி...
போர்க்காலத்தில் காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் உரையாற்றியபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ள கருத்தை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கண்டித்துள்ளது. பிரதமரின் இந்தக் கருத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் பிபிசியிடம் கூறினார்....
மகிந்தவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை வேறிடத்துக்கு மாற்றக் கோருகிறது தந்தை செல்வா அறங்காவலர் குழு!
தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள, வீதி புனரமைப்பு தொடர்பான மகிந்த ராஜபக்சவின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை வேறிடத்துக்கு மாற்றுமாறு தந்தை செல்வா அறங்காவல் குழு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு யாழ். காங்கேசன்துறை வீதி புனரமைப்பு செய்யப்பட்ட போது இந்த நினைவுக் கல் அமைக்கப்பட்டது. இந்த நிலையில்,...
யாழ்ப்பாணத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை...
அரசியல் கைதிகளின் விவகாரம் சரியான முறையில் கையாளப்படவில்லை என சட்டத்தரணி கே.வி. தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சுமூகமான சூழல் நிலவுகின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசியல் ரீதியான அணுகுமுறை மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறை என இரண்டு வழிமுறைகள் காணப்பட்டன. இதில் எந்தமுறையூடாக பிரச்சினையை அணுகப் போகின்றோம் என்பதை...
யாழ்ப்பாணம் அல்-ஹதீஜா மகளிர் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலையில் சுமார் 6 வருடங்களாக தங்கியிருக்கும் தங்களை மாற்று இடமொன்று வழங்காமல் அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகக் கூறியே குறித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் தற்போது 13 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம்...
யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப் பகுதியில் சனிக்கிழமை (16) இரவு, இளைஞனொருவர் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொண்ட வாள்வெட்டில், படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் தர்மிகன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு வாள்வெட்டுக்குள்ளாகியுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கொட்டடி பகுதியில் உள்ள...
புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு நாட்டிற்குள் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அனைத்து உலக நாடுகளினதும் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதன் காரணமாக அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்காமல், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற வேலைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவை நகரத்தின் சுற்றுவட்டப் பாதையின்...
புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் ஒன்றை கொண்டு வரும் செயற்பாட்டை தற்போதைய அரசாங்கம் நேர்மையாக முன்னெடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் யோசனைகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு ஒன்று தொகுக்கப்படுவதாக இருந்தால் அது பல்வேறு...
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சீர்திருத்த திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் தை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இதன்படி பாலியல் துஸ்பிரயோகத்தினால் 149 சிறுவர்களும் பாலியல் சேஷ்டைகளினால் 18 சிறுவர்களும், மற்றும் உடல்...
தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான உபகுழுவின் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், இந்த மாத இறுதியில் அதன் அறிக்கை முன்வைக்கப்படும் என்றும்...
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னாலை சுப்பிரமணியம் முருகன் கோயில் அருகில் உள்ள வீட்டுக்குள் சனிக்கிழமை (16) இரவு நுழைந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல், வீட்டில் உள்ள அனைவரையும் கத்தி முனையில் அச்சுறுத்தி 5 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் வீட்டு கதவை...
மாணவ தாதியர் பயிற்சிக்காக 1000 மாணவ மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்கி தரமான சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக சுகாதார சேவையின் மனித வளங்கள்...
நெடுந்தீவு கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து ஒப்படைத்துள்ளதாக யாழ்.மாவட்ட கற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்திய புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகில் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கோ பௌத்த மதத்திற்கோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை; நாட்டை பிரிப்பதற்கு இடமில்லை
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதம் சீர்குலையப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அலரி மாளிகையில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், புதிய...
யாழில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாகலந்துகொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு, தைப்பொங்கல் விழா என்பது யாழ்ப்பாணத்திற்கானதோ அல்லது இந்துக்களுக்கு மட்டுமானதோ அல்லது தமிழ் மக்களுக்கான நிகழ்வோ அல்ல முழு நாட்டுக்கும் பொதுவான தேசிய நிகழ்வாகும். நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சூரிய பகவானை தரிசிக்கின்றோம்....
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மதியம் ஒரு மணியளவில் காங்கேசன்துறை தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை சேர்ந்த மகேந்திரராசா மயூரன் (வயது-28) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணியில் உள்ள குடிசையினை பார்வையிட செல்வதாக கூறிச் சென்ற நிலையில், தமது மகனை காணாத குடும்பத்தினர்...
இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸை நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரை...
[caption id="attachment_105210" align="aligncenter" width="1024"] (File Photo)[/caption] வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நேற்று தைப்பொங்கல் நாள் அன்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் என்ற பெயரில் பசுமைக் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஐங்கரநேசன் மாகாண சபையில் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரனுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுபவர். இதனால் மாகாண...
போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை எதிர்வரும் ஜுன் மாதத்திற்கு முன்னராக ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய சர்வ மதத் தலைவர்கள், முன்னுதாரணம் கொண்ட சர்வதேச நாடுகள் மற்றும் அரச பிரமுகர்களுடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. ஐ.நா மனித...
Loading posts...
All posts loaded
No more posts
