- Saturday
- November 22nd, 2025
எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், புதிய அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட...
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ளதன் பயன் இந்நாட்டு மக்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதில் தொடர்ந்து சிக்கல் காண்படுகின்றது. தற்போதைய சர்வதேச விலைகளுக்கமைய பெட்ரோல் ஒரு லீற்றர் 90 ரூபாய்களுக்கும் டீசல் ஒரு லீற்றர் 70 ரூபாய்கள் வரையும் குறைக்கமுடியும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. பிரதானமாக கச்சா எண்ணையின் வழங்கல் அதிகரித்துள்ளமையினால்...
படிக்காது படம் பார்த்துக்கொண்டு இருந்ததை தந்தை கண்டித்ததை தாங்க முடியாத மாணவி வீட்டு யன்னலில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுதுமலை மேற்கில் இடம் பெற்றுள்ளது. நேற்று மாலையில் கோவிலுக்கு பூசைக்காக சென்று விட்டு தந்தை வீடு திரும்பிய நிலையில் மகள் படிக்காது படம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். தந்தையார் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு படிக்கும் படி...
சர்ச்சைக்குரிய என்றிக் இலக்சீயஸின் இசை நிகழ்ச்சியின் போது மது அருந்தியிருந்த பெண் ஒருவர் தமது கச்சையை கழற்றி எறிந்த சம்பவம் மற்றும் அனுமதிப்பத்திரம் இல்லாமல் நிகழ்ச்சியின் போது மது விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் இந்த நடவடிக்கைகள் இலங்கையின் கலாசாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
தமிழ் மக்கள் பேரவை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டு விட்டதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என்பதை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு தெரிவிக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் வெளியிடப்படும் இப்பரப்புரைகளைப் பொதுமக்கள் நம்பவேண்டாம் என தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு கேட்டுக்...
போர் முடிந்து 7 வருடங்களாகியும் பெருமளவான முன்னாள் போராளிகள் இன்னும் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர் என்று செய்திச்சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியில் வாழும் சிவலிங்கம் ரவீந்திரதாஸ் என்ற முன்னாள் போராளியை கோடிட்டுள்ள செய்திச்சேவை, அரசாங்கத்தின் புனர்வாழ்வு மையத்தில் 3 வருடங்களை கழித்த அவர், தற்போது தொழில் வாய்ப்பின்றி உள்ளார் என்று தெரிவித்துள்ளது. புனர்வாழ்வின் போது...
இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை முற்றாகத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாட்டிறைச்சி தேவைப்படுவோருக்காக வெளிநாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்ய முடியும் என்றும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாட்டுப் பொங்கல் பண்டிகையில் முக்கியத்துவம் பெறும் ஒரு விலங்கு என்பதுடன் மத ரீதியிலும் மக்கள் வாழ்விலும் பெரும் மதிப்பைப்...
மிகவும் குறைந்த செலவுடன் அலைபேசியை பயன்படுத்தக் கூடிய நாடாக இலங்கை திகழ்கின்றது. அலைபேசி ஒன்றை பயன்படுத்த மிகவும் குறைந்த மாதாந்த செலவினைக் கொண்ட நாடு இலங்கையாகும். இதன்படி. இலங்கையில் 0.97 அமெரிக்க டொலரைக் கொண்டு அலைபேசி ஒன்றை ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்த முடியும் என சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது....
கனடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“வாழும் வீரர்” (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். திரு சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்திரு ம.ஏ.சுமந்திரன், விருதைப் பெற்றுக் கொண்டார். இந்த விழாவுக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டிஒன் (Stephane Dion), குடிவரவு, ஏதிலிகள் மற்றும்...
அகில இலங்கை சைவ மகா சபை, இந்தியா தருமபுரம் ஆதீனத்தின் அனுசரணையுடன் சைவ சித்தாந்தம் மற்றும் திருமந்திர பயிற்சி நெறியை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்ற சைவ மகா சபையின் பிரதிநிதிகள் தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்களின் குரு முதல்வர்களுடன் கலந்துரையாடியதன் பேரில் யாழ்ப்பாணத்தில் இந்தப் பயிற்சி நெறி...
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இளவயதினர் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலையானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 21 வயதுக்குட்பட்டவர்களே, அதிகளவில் போதைப்பொருள் பாவனை, மதுப்பழக்கம் புகைத்தல் ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளனர். கடந்த கால யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்;தீவு மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி,...
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீநிக சஞ்ஜீவ ஜெயக்கொடி, சிலாபம் பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட வென்னப்புவ பொலிஸ் நிலையத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை முதல் இடமாற்றம் பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரியாக கந்தாணை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.கஹந்தவெல, கோப்பாய் பொலிஸ்...
அண்மையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பலாலி வயாவிளான் மற்றும் தையிட்டி பகுதிகளில் உள்ள மக்கள் தமது காணிகளில் உள்ள இயற்கை வளங்களை கூட பாதுகாக்க முடியாத நிலமையில் காணப்படுகின்றார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாக இடம்பெயாந்து தமது வீடு வாசல்களை இழந்து சொத்துக்களை இழந்து பல்வேறு துன்ப துயரங்களுக்கும் உள்ளாகிய...
பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு மேலும் இரு புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பருத்தித்துறை இ.போ.ச சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே தினமும் காலை 4.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு ஒரு பஸ் சேவை நடைபெற்று வருகின்றது. இதனைவிட இனிமேல் காலை 7.45 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் பருத்தித்துறையில் இருந்து திருகோணமலைக்கு புதிய சேவைகள் இடம்பெறவுள்ளன....
புதிய அரசியல் அமைப்பின் சீர்த்திருத்தங்கள் தொடர்பாக வட மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று நேற்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது புதிய அரசின் அரசியல் அமைப்பிற்க்கும் மக்களுக்கும் இடையில் காணப்படும் அதிகரித்துள்ள தொடர்பாடல்கள், சமூக இனங்களின் ஒற்றுமைக்கான வழிகள், மற்றும் பிரதேச...
மிருசுவில் பகுதியில் நபர் ஒருவரை உலக்கையால் அடித்துக்கொலை செய்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முருகேசு சத்தியநாதன் என்பவரே அவரது வீட்டில் வைத்து இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டவராவார். கொலை சம்பவத்தினை புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அதே...
நாட்டிலுள்ள அனைத்து மக்களின் அச்சம், சந்தேகங்களை நீக்கி சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத் திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முன்வருமாறு சகல சமயத் தலைவர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது, நீதி அல்லது புதிதாக நிறைவேற்றப்படும் சட்டமூலங்களால் மட்டுமே இயன்றதல்ல...
கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் உறங்கா விழிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இம்மாதம் (2016 சனவரி) 125000 பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. மேற்படி உதவிகள் உயர்கல்வி மற்றும் பாடசாலைக்கல்வி, மருத்துவ சிகிச்சை, வாழ்வாதாரம் போன்ற தேவைகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளுக்காகவும் மற்றும் இலவசக் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி உதவிகள்...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலையிலுள்ள ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை சம்பந்தமாக ஊடகம் தவறான செய்திகளை பிரசுரிப்பதால் பொதுமக்கள் பலர் சஞ்சலங்களுக்கு உள்ளாகி வருவதாக மன்னார் ஆயர் இல்ல வட்டாரம் கவலை தெரிவிக்கின்றது. கடந்த வாரம் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 23 வருட ஆயர் பணியிலிருந்து ஓய்வு...
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சிங்கள பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்.. நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்கத்துடன்...
Loading posts...
All posts loaded
No more posts
