- Friday
- August 7th, 2026
எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் தன்னைக் கைதுசெய்யலாம் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு சென்றால் நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, விமல் வீரவங்க, ரோஹித அபேகுணவர்த்தன, குமார வெல்கம ஆகியோரைக் கைதுசெய்த பின், இறுதியாக தான் கைதுசெய்யப்படலாம் என, அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (28) தலதா மாளிகைக்கு சென்ற அவர்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு நேற்று 27-02-2016 சனிக்கிழமை யாழ் நல்லூர் சட்டநாதர் சிவன்கோவில் வீதியில் அமைந்துள்ள இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி நிகழ்வு துசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக தமிழ்த் தேசிய மக்கள்...
வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 5 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பூரண ஒத்துழைப்புடனேயே பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன எனவும், அந்தக் கோணத்தில் புலன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் வட்டாரங்கள்...
"காயமடைந்த நிலையில் மக்களுடன் வந்த எனது கணவரை வவுனியா வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் சென்றதைக் கண்டபோதும் தற்போது அவர் இல்லை என மறுக்கின்றனர். எனது கணவரை வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் தடுத்துவைத்துள்ளனர் என நான் கருதுகின்றேன். எனவே, எனது கணவரை மீட்டுத்தாருங்கள்" - இவ்வாறு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளகப் புலனாய்வுப் பொறுப்பாளராக...
'இராணுவத்தினருடன் வந்த ஈ.பி.டி.பியினர் கடத்திச் சென்ற எனது மகனை கடற்படையின் சீருடையுடன் எனது உறவினர்கள் பலரும் கண்டுள்ளனர்.' இவ்வாறு காணாமல் போன நபரான நீர்வேலி வடக்கைச் சேர்ந்த அச்சுதன் வைகுந்தன் என்பவரின் தாயார் அருந்ததி காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி...
அரச உத்தியோகத்தர்களை ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், மற்றும் பிரதேச செயலகங்களில் காணப்படுகின்ற கடமைகள் மற்றும் பொருத்தமான விடய அறிவு மற்றும் தேர்ச்சி என்பன இந்த உத்தியோகத்தர்களிடத்தில் இல்லாதபடியினால் எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகளை அடைந்து கொள்வதில் பிரச்சினைகள் தோன்றியுள்ளதையடுத்தே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த முன்மொழிவிற்கு அமைச்சரவை...
யாழ் மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 491 அங்கவீனர்கள் உள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 10 பேருக்கு மட்டும் மத்திய அரசினால் மாதாந்தம் மூவாயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்படுகிறது. ஏனையோருக்கும் இதே கொடுப்பனவை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்ட போது அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில்...
இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பறங்கியர் இனத்தின் அடையாளமும் தனித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனம் ஒன்றை இயற்றுவது தொடர்பிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரச குழுவினர் கிழக்கு மாகாணத்தில் தமது அமர்வைகளை நடத்தியபோது, பறங்கியர் சமூகத்தினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக இருக்கும் பறங்கியர் போன்றவர்களின் அபிலாஷைகள்,...
யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவி நேற்று பிற்பகல் இனந்தெரியாத இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ் பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற இத் தாக்குதலில் மாணவி அப்பகுதியில் டெனிம் மற்றும் ரீசேட்டுடன் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. மாணவி பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாக அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு...
பிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளனர் இலங்கை மருத்துவர்கள். காலி கரம்பிடிய வைத்தியச்சாலையிலே இந்த சத்திரசிகிச்சை மேல்கொள்ளபட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடந்த இந்த சத்திரசிகிச்சையின் பின் குறிந்த மாணவனுக்கு வழங்கப்பட்ட விஷேட மருத்துவ உடையின் உதவியுடன் நிமிர்ந்து சாதாரண மனிதர்களை போல்...
அண்மையில் இலங்கை மக்களை மன ரீதியாக பெரிதும் பாதித்த வவுனியா சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாக அங்கிருந்து வரும் சில தகவல்களில் தெரிய வருகிறது. எனினும் குறித்த செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை அறியமுடியவில்லை. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட 13 வயது...
வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற மக்கள் தங்களைச் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துவதெனத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று முற்பகல்-11 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமின் மகாதேவன் பொதுமண்டபத்தில் நலன்புரி நிலையங்களின் பொது நிர்வாகக் குழுத்தலைவர் எஸ். அன்ரனிக் குயின் தலைமையில்...
இலங்கையில் இயங்கி வரும் செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஊடக அமைச்சில் செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சு சகல செய்தி இணையத்தளங்களுக்கும்...
ஒரு சேவையில் இணைந்தால் அதிலே எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஏனோதானோ என இருந்து ஓய்வுபெறுவதைத் தவிர்த்து, எமது வடமாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும்' என்ற நோக்குடன் முன்னேற்றகரமாக செயற்படுங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் இணையத்தள அங்குரார்ப்பணம் நேற்று வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோது, இணையத்தளத்தை...
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொல்ல கோட்டாபய ராஜபக்ஷவால் 5 கோடி ரூபா கருணா குழுவுக்குக் கூலியாக வழங்கப்பட்டதாக புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி லியனாச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டார். இந்த கொலை கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு...
காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று தொடக்கம் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் மார்கழி மாதம் இவ் அமர்வுகளின் இரண்டாம் கட்ட விசாரணைகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதன்போது யாழ் மாவட்டத்தில் இடம்பெறாத பிரதேச செயலக பிரிவுகளில் இவ் அமர்வுகள் இடம்பெறவுள்ளது. அந்தவகையில்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை எமது நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்து வந்துள்ள தேயிலை ஏற்றுமதித் தொழில்துறையை தமது தோள்களில் சுமந்து வந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வு இன்னும் இருளுக்குள்ளேயே இருந்து வருகின்றது. வெள்ளைக் காரர்கள் ஏற்படுத்திய லயன் குடியிருப்புக்களே இன்னும் அவர்களின்...
மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையான நேரத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அநாவசியமான மின் உபகரணங்களை பயன்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை பொது மக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீள செயற்படுத்தும் வரையே இதனை...
Loading posts...
All posts loaded
No more posts
