Ad Widget

யாழ். நீதிமன்றத்தில் கெஹலிய ரம்புக்வெல

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

hakeleya-kakaleya-ramukkawala

யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் ஆகியோர் காணாமல் போனமை குறித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி முன்னிலையாகுமாறு யாழ். நீதிமன்றம் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு உத்தரவிட்டிருந்தத நிலையில், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால், பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கெஹலிய ரம்புக்வெல யாழ். நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி இரவு, மனித உரிமைகள் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த லலித், குகன் ஆகியோர் காணாமல் போனார்கள்.

இவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

லலித், குகன் காணாமல் போன சம்பவம் நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts