Ad Widget

கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் கதிர்காமநாதன் காலமானார்

கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் முத்தையா கதிர்காமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது 72ஆவது வயதில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Kathirkama-nathan-colombo-tamil

கடந்த மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சங்கத்தின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் பம்பலப்பிட்டி – ஜெயா வீதியிலுள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு, நாளை மறுதினம் வியாழக்கிழமை பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் பல தடவைகள் தலைவராக பதவி வகித்த கதிர்காமநாதன், அகில இலங்கை இந்துமா மன்றத்தின் பொதுச்செயலாளராகவும் கடமையாற்றினாா்.

யாழ்ப்பாணம் – நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கதிர்காமநாதன் பிரபல வா்த்தகராவாா். நீண்டகாலமாக கொழும்பு பம்பலப்பிட்டியில் வசித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts