வடக்கில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஜோன் ஸ்னோ வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள நிலங்கள் மீண்டும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும், வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலி இலக்கிய விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த ஜோன் ஸ்னோ வடக்கிற்கும் விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.