Ad Widget

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளோம் – பிரதமர்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்துலதற்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் ரணில் விக்ரமசிங்கவிடம், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில், வௌிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என கூறி இருந்தார்.

எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது, ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்று செனல் 4 ஊடகவியலாளர் பிரதமரிடம் வினவியதற்கு, காணாமல் போனவர்கள் இருப்பதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

Related Posts