- Friday
- November 21st, 2025
புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின. இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்பித்தார். புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைக்குறிய உறுப்பினர்கள்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று சனிக்கிழமை சற்று முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை தனது டிபன்டர் ரக வாகனத்தில் கடத்தி, துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காகவே ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைதுசெய்யும்படி கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று...
கடந்த ஒரு வருட காலத்தினுள் நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது குறித்து கேள்வியெழுப்ப வேண்டியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இக்கேள்வியை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நல்லாட்சி அரசாங்கம் கடந்த ஒருவருட காலத்தினுள் நாட்டுக்காகவும்,...
தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும் சபையாக பாராளுமன்றம் அமையவுள்ளதோடு தீர்வைத்தரும் ஆண்டாக இவ்வருடம் அமைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய அரசியல் சூழலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் என்ற விடயங்கள் தொடர்பில் மக்களுடனான கலந்துரையாடலொன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
புகைப்படக் காட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது புகைப்படத்தினைப் பார்த்து பிரம்மித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதி அபிமங்கள வருட புகைப்படநினைவுகள்' கண்காட்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. இக் கண்காட்சியை திறந்து வைத்து விட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுடனான போரில் வென்றிருக்கலாம் ஆனால் போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேநேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனமாகி விட்டன.இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி. மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓர் ஆண்டு பூர்த்தி விழா நேற்று கொழும்பில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நல்லாட்சி அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. 'மக்கள் ஆணைக்கு மதிப்பளி' என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்பாட்டம் நேற்றுக் கொழும்பில் நடத்தப்பட்டது. இதில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பங்களில் சுமார் 93 சதவீதமானவைக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. ருவான் குணசேகர தெரிவித்தார். கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களுக்குள் மட்டும் 1,850 பாலியல் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றுள் 93 சதவீதமானவை அதாவது...
பொது மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் வகையில் ´ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்´ என்ற வேலைத் திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த திட்டம்...
வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினமாகும். ஜனநாயக அரச நிவாகத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால...
பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன மற்றும் பிரதான கட்சிகள் என்று இல்லாமல் அனைத்து கட்சிகளையும் எம்முடன் இனைத்துகொண்டு நல்லாட்சியை முன்னெடுப்போம். அனைத்து மக்களும் எம்மோடு இருப்பதால் நல்லாட்சியை ஒரு போதும் கைநழுவ விட மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த ஆண்டில்...
மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த கைப்பேசி சார்ஜரின் வயரை தவறுதலாக வாயில் வைத்தமையால், ஏழு மாத பெண் சிசுவின் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று நேற்று பிற்பகல் திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில், அச்சிசுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குறித்த சிசுவை காப்பற்ற முடியவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பலாலி கட்டளை தலைமையகத்தில் சந்தன மரக்கன்று இன்று வெள்ளிக்கிழமை (08) நாட்டப்பட்டது. பிரிகேடியர் டி.எஸ்.வீரமணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சந்தனமரம் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து, 1,000 பயன்தரு மரக்கன்றுகளை கட்டளை பணியகத்தின் கீழ் உள்ள இராணுவ வீரர்கள் நாட்டிவைத்தனர்.
08.01.2016 முதல் 25.07.2017ஆம் தேதி வரையிலான ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன் மற்றும் ராசிப் பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார். மேஷம் எதிலும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப்...
தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. தமிழ் மக்கள் பேரவையானது தனது அடுத்த கட்ட நடவடிக்கையாகத் தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியை வலுவாக முன்னெடுக்கவுள்ளது. அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கும், நோக்குடன் மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது கடந்த 2ஆம்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முற்பட்டதாக கூறப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளதாக, தெரியவந்துள்ளது. 2005 – 2006ம் ஆண்டு காலப் பகுதியில் மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்தபோது, இந்தக் கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை - மன்னம்பிடிய பகுதியில் வைத்து, குறித்த...
நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள சுன்னாகம் பகுதி மக்களுக்கு மாற்றீடாக வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களின் நிலையை அவதானத்தில் கொண்டு தனது ஆளுகைக்குட்பட்டுள்ள பிரதேச சபைகளின் ஊடாக குடிநீரை மீள வழங்க வடக்கு மாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
தங்கள் வீடுகள் 1987ஆம் ஆண்டு இருந்தமையும், தற்போது இருந்த இடமே இல்லாமல் அழிக்கப்பட்டதையும், வலிகாமம் வடக்கு மக்கள் புகைப்பட ஆதாரத்துடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் காட்டினர். உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்குப் பகுதிகளை முதலமைச்சர், வியாழக்கிழமை (07) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போதே மக்கள்...
அமரர் அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 91ஆவது பிறந்த நாள் அறக்கொடை விழா நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடா சைவசித்தாந்த மன்ற நிறுவுநரும் இளைப்பாறிய ஆசிரியர்களுமான...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்று ஒரு வருடகால பூர்த்தியினை முன்னிட்டு முக்கிய நிகழ்வுகள் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் தேவநாயகன் தலைமையில் நடைபெற்றது. புதிய அரசாங்கம், நாட்டின் சமாதானம், நல்லிணக்கத்தின் ஊடான ஒரே தேசம் மாபெரும் பலம் என்னும் தொனிப்பொருளிலேயே நிகழ்வுகள் நடைபெற்றது....
Loading posts...
All posts loaded
No more posts
