அரசின் செயற்பாடுகளுக்கும் ஜனாதிபதிக்கும் ஐ.நா செயலாளர் பாராட்டு

இலங்கையில் அரசியல் மற்றம் ஒன்றை ஏற்படுத்தி முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்டபான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்நாட்டு...

முட்­கம்பி அமைத்து முகாமை பாது­காத்­தது புலி­களின் தாக்­கு­தலில் இருந்து தப்­பி­க்க­வே – இராணுவ ஊடகப் பேச்­சாளர்

வடக்கில் வதை­முகாம் இருப்­ப­தாக கூறப்­படும் கட்­டுக்­க­தை­களை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. வெறு­மனே முட்­கம்­பி­களை வைத்து பாது­காப்பு முகாமை வதை­மு­கா­மாக கணிக்க முடி­யாது என இராணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீர தெரி­வித்தார். ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் தொடர்பில் அதி தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்­ச­ரவை...
Ad Widget

யாழில் இன்னும் 7000 ஏக்கர் நிலம் படைகள் வசம்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் பொதுமக்களின் ஏழாயிரம் ஏக்கர் நிலம் படையினர் வசம் இன்னும் உள்ளது என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் அதை சிறிது சிறிதாக அந்த நிலங்களை தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில் விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அவர் கூறுகிறார். அண்மைக்...

இலங்கைக்கு நாசா அவசர எச்சரிக்கை!

இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும்...

தமிழினி எழுதிய நூல் பெப்ரவரியில் வெளியாகிறது!

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த தமிழினி பூந்தோட்டம்...

வடக்கின் நிலைமைகள் குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே தயாராக இருக்கின்றது என்று நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார். இலங்கைக்கு நேற்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே நேற்றுக்காலை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து இருதரப்பு சந்திப்பை...

தெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி!

தெல்லிப்பழை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 5840 ஏக்கர் காணியில் 984 ஏக்கர் காணியை விடுவித்து 2050 குடும்பங்களை அங்கு மீள்குடியேற்ற இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்- நல்லிணக்கம் மற்றும்...

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர்போத்தல்களை விற்பனை செய்தவருக்கு தண்டம்

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் குடி நீர் போத்தல்களை விற்பனை செய்த சாவகச்சேரி பகுதியை சேர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (06) தீர்ப்பளித்தார். சாவகச்சேரி பொதுச்சுகாதார பரிசோதகரால் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் போது, குறித்த குடிநீர் போத்தல்கள்...

யுவதியை கூட்டிச் சென்றவருக்கு விளக்கமறியல்

யுவதியொருவரைக் கூட்டிச் சென்று பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த இளைஞரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (06) உத்தரவிட்டார். வரணி, இயற்றாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய யுவதியொருவரை காதலித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 1ஆம் திகதி யுவதியை...

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவம் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டமை நிரூபணம்!

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்ட வலி.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினர் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை வரைபடங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. வலி.வடக்குப் பிரதேசத்தில் 700 ஏக்கர் நிலப்பரப்பு அண்மையில் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில் வீமன்காமத்தில் இராணுவ முகாம் இருந்த நிலமும் அடக்கம். இந்தப் பகுதிக்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கான தலைமை முகாமாக செயற்பட்டிருக்கலாம்...

நோர்வே வௌிவிவகார அமைச்சர்- எதிர்கட்சித் தலைவர் சந்திப்பு

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (07) இலங்கை வந்த நோர்வே வௌிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரன்டே (Borge Brende) நேற்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது எதிர்கட்சித் தலைவர் மேற்கொண்ட புதிய அணுகுமுறையை பாராட்டிய நோர்வே வௌிவிவகார அமைச்சர் இதனூடாக மக்களின் எதிர்பார்ப்புக்களை, தேவையை நிறைவேற்ற முடியும் என்று தான்...

வடமாகாண பட்டதாரிகளுக்கு நியமனம்

வடமாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று காலை யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர். வடமாகாணத்தில் 05 ஆண்டுகளுக்கு முற்பட்ட...

உங்கள் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், நாடுபூராகவும் பல வேலைத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி காலை 07.00 மணியளவில் விஷேட சமய வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு வருடப் பூர்த்திக்கான பிரதான நிகழ்வு பிற்பகல் 02.00 மணிக்கு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு...

விடுவிக்கப்பட்ட பகுதிகளை வடமாகாண முதலமைச்சர் நேரில் பார்வை!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேவரன் இன்று(7) மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று மாலை 4 மணியளவில் முதலமைச்சர் மேற்படி பகுதிகளை பார்வையிட்டதுடன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறீமோகனன் மற்றும் முன்னாள் வலி, வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் ஆகியோருடனும் மீள்குடியேறியுள்ள மக்களிடமும் தேவைகள் மற்றும்...

அரச அலுவலகங்களின் அரசியல் பேசாதீர்கள்

அரச அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள், சக அலுவலர்களுடன் சதா பேசிக் கொண்டிருப்பதையும் வேலையில் இருக்கும் போது அரசியல் பேசுவதையும் ஒரு பழக்கமாக்காதீர்கள். கட்டுப்பாடற்று கடமைகளை மறந்து பணிகளில் ஈடுபடுவதைப் பழகிக் கொள்ளாதீர்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 700 பேருக்கான நியமனங்கள்...

ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல்: உஷார் நிலையில் படை

நாட்டில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் பாதுகாப்புப் படைகள், எச்சரிக்கையுடன் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் மேஜர் ஜயனாத் ஜயவீரவே, இத்தகவலை வெளியிட்டுள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் காணப்படுவதாகவும் அக்குழுவோடு தொடர்புடைகளைக் கொண்டவர்கள் காணப்படுவதாகத்...

இம்மாதம் யாழ்ப்பாணத்தில் இலவச கல்வி மற்றும் களிப்பாட்ட அம்சங்கள்

நாட்டின் முன்னணி இலக்கியசார்ந்த கொண்டாட்ட நிகழ்வான Fairway Galle Literary Festival இன் இறுதியானதும் மூன்றாவதுமான வார நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த கொண்டாட்டத்தில் பிரத்தியேகமான மற்றும் பரந்தளவு சர்வதேச கலைஞர்கள் பங்கேற்கவுள்ளதுடன், உள்நாட்டு திறமைசாலிகளும் பங்கேற்கவுள்ளனர். சகல நிகழ்ச்சிகளும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் முற்றிலும் இலவசமாக...

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பொய்யான குற்றச்சாட்டு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அடுத்துவரும் ஒரு சில வாரங்களில் அது வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வெளியான செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான...

சில தமிழர்கள் மீதான சித்ரவதை தொடர்கிறது – சர்வதேச உரிமைக் குழு

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஓராண்டாகின்ற போதும், சிறுபான்மையினரான தமிழர்களில் சிலரை பாதுகாப்புப் படைகள் சித்ரவதை செய்வது தொடர்வதாக தென்னாப்பிரிக்காவைக் சேர்ந்த உரிமை பிரச்சாரக் குழுவான உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசத் திட்டம் குற்றஞ்சாட்டியுள்ளது. சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தாலும், தமிழர்கள் சிலர் இன்றளவும் கடுமையான வன்முறைக்கும் சித்ரவதைக்கும் ஆளாகிவருவதாக அக்குழு...

சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாறிவரும் பண்ணைக் கடற்கரை

யாழ்ப்பாணம் கோட்டை பகுதியின் பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரை பகுதி, அழகாக்கப்பட்டு பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டுள்ளதால், மாலை வேளைகளில் பெருமளவான மக்கள் அங்குச் சென்று, கடற்கரை அழகை இரசிப்பதோடு அங்கு நடைபயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், பண்ணையை சுற்றுலா இடமாக மாற்றும் நடவடிக்கை கடந்த 2013ஆம் ஆண்டு 23...
Loading posts...

All posts loaded

No more posts