Ad Widget

வீட்டுத்திட்ட வீட்டில் மது அருந்தும் இளைஞர்கள்!

தெல்லிப்பளை – அளவெட்டி வீட்டுத்திட்ட உதவியின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் உரியவர்கள் கடந்த பல வருடங்களாக மீள்க்குடியேறாமையால் அயலில் உள்ள கலவன் பாடசாலையும், அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களும் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள அளவெட்டி அருணோதயாக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீடு கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதினால் இளைஞர்களின் தங்குமிடமாக மாறியமையால் அது பெண் பிள்ளைகளுக்கும், பொது மக்களுக்கும் பிரச்சனைக்குரிய இடமாக காணப்படுகின்றது.

குறித்த இடத்தில் இளைஞர்கள் மது அருந்துவதுடன், தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் இரவு வேளைகளில் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதாகவும் அந்தப் பகுதயில் உள்ள பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

வீட்டுக்காரர்கள் மானிப்பாயில் இருப்பதாகவும் இது சம்பந்தமாக அறிவித்தும் நடவடிக்கை எடுக்காததுடன், அரச அலுவலர்களும் கவனம் செலுத்தாத நிலைமை தொடர் கதையாகவுள்ளதாகவும் பலரும் குற்றம் சாட்டுகின்றார்கள்.

வீட்டுத் திட்டங்களை உரியவர்களுக்கு உரிய முறையில் வழங்காது வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு வழங்குவதன் மூலம் இத்தகைய துயரங்கள் ஏற்படுவதை உரிய கிராம அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.

Related Posts