Ad Widget

இலங்கை சுவீடன் பிரதமர்கள் சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள மீன்களுக்கான தடை நீக்குவதற்கு மற்றும் ஜீ.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்குவதற்கும் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் தெரிவித்துள்ளார்.

sweedan

சுவிட்சர்லாந்தில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் சுவீடன் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு இலங்கை மேற்கொள்ளும் வேலை திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டினுள் நடைமுறைப்படுத்துகின்ற வேலைத் திட்டங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவீடன் பிரதமருக்கு இதன்போது விளக்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உறுப்புரிமையை பெறுவதற்கு தமது நாடு போட்டியிட உள்ளதாகவும், அதற்காக உதவி வழங்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுவீடன் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts