Ad Widget

யாழில் இன்று காணிகள் விடுவிக்கப்படவிருந்த நிகழ்வு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டது

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை மக்களின் காணிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில், அந்நிகழ்வு திடீரென மறு அறிவித்தல் வரும்வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளினால் உரிய மக்களிடம் கையளிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இது குறித்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தலைமையில் குறித்த நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நடாத்தப்பட வேண்டும் என்பதற்காகவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறனார்.

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரின் வசமிருந்த 701.5 ஏக்கர் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களையே இன்றைய தினம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts