பெண் மீது கல்வீச்சுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில்லறைப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்திவரும் இளம்பெண் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வெள்ளிக்கிழமை (22) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதில் பெண் தலையில் படுகாயமடைந்தார்.

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் மேற்படி பெண் வியாபாரம் செய்தபோது, பெண்ணை வெளியில் செல்லுமாறு கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரட்டினர்.

வெளியில் சென்ற பெண் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக நின்றுகொண்டிருந்த பொதுமக்களுக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதன்போது, அங்கு வந்த வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பெண் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் பெண் காயமடைந்தார்.

Related Posts