- Sunday
- August 9th, 2026
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள படுகாடு பகுதியில் பல வருடங்களுக்கு பின்னர் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நெல் வேளாண்மைக்குரிய காணி உரிமை தொடர்பாக தமிழ் விவசாயிகளுக்கும் சிங்கள விவசாயிகளுக்குமிடையில் காணப்பட்ட அமைதியற்ற நிலை காரணமாகவே காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. காலை 6.00...
அநுராதபுரம், சாலியபுர பிரதேசத்தில் வைத்து ரயிலொன்று தடம் புரண்டதில், வடக்குக்கான ரயில் போக்குவரது செயலிழந்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட உத்தரதேவி ரயிலே, இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சிலை அலங்கரிப்பாளர்களுக்கு எதிர்வரும் 2ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் அன்றைய தினத்தில் மூடப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் கூட்டறவுச் சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது. இம்முறை மே தினம், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருகின்ற காரணத்தால், மறுநாள் திங்கட்கிழமை சிகை அலங்கரிப்பாளர்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக மக்கள் அவதியுறுவதை அடுத்து, திருநாவுக்கரசரின் குருபூசைத் தினமான எதிர்வரும் இரண்டாம் திகதி சைவ மகா சபையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்களின் தாகம் தீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. வடமாகாணத்தில் யாழ். நகர், காரைநகர் மற்றும் தெல்லிப்பழையிலும் கிளிநொச்சியிலும் மாங்குளத்திலும் இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை...
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு மே மாதம் 03ஆம் திகதி வரை விடுமுறை இரத்து செய்யப்பட்டள்ளதாக இ.போ.ச திணைக்களம் அறிவித்துள்ளது. 'மே தினக் கொண்டாட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் இ.போ.ச பஸ்களை கோரியுள்ளனர். இதனாலேயே அவர்களுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டள்ளன' என்று இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (01)...
மனைவியின் காது, மூக்கு என்வற்றைக் கடித்துக் குதறியுள்ளார் கணவன். தென்மராட்சிப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. சவுதியில் இருந்து வந்த கணவன் தனது மனைவியுடன் வாக்குவாதப்பட்டுள்ளார். சவுதியில் மனைவியைக் கணவர் அடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாம். அங்கு கணவர்கள் மனைவியை அடிப்பதில்லையாம். மனைவியைத் தள்ளி கீழே விழுத்திவிட்டு அவர்களைக் கடித்தே காயம் ஏற்படுத்துவது வழக்கமாம். அவ்வாறே தனது கணவன் தன்னைத்...
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு கடந்த திங்கட் கிழமை ஆரம்பமாகி நேற்று வரை நடைபெற்றது. இந்த அமர்வுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 1146 பேருக்கான அழைப்பினை விடுத்த போதும் 705 பேர் சாட்சிய பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு 283 பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி...
பாடசாலை முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் தந்தையாருடன் சென்ற மாணவியை தனியார் பயணிகள் பேருந்து மோதித்தள்ளியதில் மகளும்,தந்தையும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மதியம் ஏ9 வீதி ஆஷா கடையடி, மீசாலையில் இடம்பெற்ற இவ் விபத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் தரம் 6ல் கல்வி பயிலும் மீசாலை மேற்கு ,மீசாலையைச் சேர்ந்த அருட்குமரன் ஆதினா...
வவுனியா தரணிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 13வயது பாடசாலை மாணவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா பெரியகோமரசன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் வடிவேல் ரவிக்குமார் 13வயது பாடசாலை சிறுவன் 25.04.2016 பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக...
வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குள விவசாயப் பண்ணைக்குரிய நிலத்தில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைப்பதற்காக றிசாட்பதியுதீன் அவர்களின் அமைச்சுக்கு வன்னி மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினால் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாண்டிக்குள விவசாயப் பண்ணை அமைந்துள்ள நிலம் 1989ஆம் ஆண்டு மத்திய...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியமாக மாறுமாறு 11ஆவது சந்தேகநபர் துன்புறுத்தப்படவில்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி கொலைச் சம்பவத்தில் தனது மகனான உதயசூரியன் சுரேஸ்கரனை (11 ஆவது சந்தேகநபர்) அரச தரப்புச் சாட்சியமாக மாறுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் துன்புறுத்துகின்றனர் என சந்தேகநபரின் தாயார் இலங்கை மனித உரிமைகள்...
சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் 21 இந்திய மீனவர்கள் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற் பிரதேசத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அலவி அக்ரம் தெரிவித்தார். மேற்படி இந்திய மீனவர்கள் பயணம் செய்த மூன்று மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன....
தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் இடம்பெறும் தொடர் கைதுகளால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 30 நாள்களுக்குள் 33 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வடக்கு, கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கும், கொழும்பு நான்காம் மாடிக்கும் கொண்டுவரப்பட்டுள்ளனர். சிலர் வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்புப்...
வடக்கு மாகாண காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற இருந்த சந்திப்பு திகதி குறிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண காணி விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற இருந்தது. கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கும் அதன் கீழ்மட்ட அரசியல் கட்டமைப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக முயற்சித்து வருகின்றார். இதன் ஓர் அங்கமாக கட்சியை விமர்சிப்பவர்களிடமிருந்து தொகுதி, மாவட்ட அமைப்பாளர் பதவியைப் பறித்து அதை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கி வருகின்றார். அந்தவகையில் சு.கவில் இருந்துகொண்டு மஹிந்த ஆதரவு அணியுடன் இணைந்து அரசியலை...
தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்குமாறு நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை செயற்படுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "தனியார்துறையினரின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சட்டம்...
ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் இவர் நேற்று வியாழக்கிழமை பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதற்கமைய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு இதன்போது நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார். மேலும்...
"இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும் - தீர்மானத்திற்கும் அரசு ஆதரவு வழங்கவே மாட்டாது." இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி முறைமையே அவசியம் என்று வடக்கு...
யாழ் சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகளினால், சட்டவிரோதமான முறையில் பழுதடைந்த மீன்களை மக்களுக்கு விற்பனை செய்த 15 மீன் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று யாழ் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சந்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. யாழ் சுகாதார திணைக்கள பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து...
யாழில் 27 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர். யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த காரணத்தினால், வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு மற்றும் பெண்களுடனான சேட்டைகளில் ஈடுபடுபவர்கள் என...
Loading posts...
All posts loaded
No more posts
