- Sunday
- August 9th, 2026
ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை, குறித்த ஹெலிக்கொப்டரை அவசரமாக தரையிறக்க முற்பட்ட போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஹெலிக்கொப்டர் சிறிதளவு சேதம் அடைந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இந்த விபத்தினால் எவருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புக்களே ஏற்படவில்லை என, விமானப் படை ஊடகப் பிரிவு...
வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினரும் தெற்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரும் இனவாதத்தை விதைப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இனவாத அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை எழுப்ப முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வட மாகாணத்தில் முதல்வர்...
முன்னாள் விடுதலை புலிகளின் பிரதேசிய தலைவர்கள் சிலரை கைது செய்தமைக்கான காரணம், சமீபத்தில் வடக்கில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைவாகவே என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். பி.பி.சி வானொலிக்கு கருத்து தெரிவித்த அவர், குறித்த கைதுகளை காவற்துறை பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.முன்னாள் விடுதலை புலிகளின்...
உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததில் விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. விடுதலைப்புலிகளின் வான் படைப் பிரிவு மற்றும் அதன் வல்லமை குறித்து உலக நாடுகளை வியந்து பார்த்த காலம் இருந்தது. விடுதலைப்புலிகளின்...
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், வெள்ளை வானில் வந்தவர்களால் புதன்கிழமை (27) மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். எனினும், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை. ஜோர்ஜ் இராஜநாயகம் மற்றும் வி.மைக்கல் என்ற இருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர்களை வானில்...
சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேக நபர்களை விரைவில் கைது செய்யவுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தற்கொலை அங்கி மீட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த சந்தேக நபர்கள் பயணித்த இரண்டு வான்கள் உட்பட 8 வாகனங்களை பயங்கரவாத...
வடக்கு, கிழக்கில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக, விசாரணைகள் நடத்துவதற்குரிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகிறது. போர்க்குற்ற...
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளித்து வந்த முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது ஆதரவை பகிரங்கமாகத் தெரியப்படுத்தியுள்ளனர். பதினான்கு சிறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று மாலை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில்...
நில அளவைத் திணைக்களத்தினால் பல இடங்களிலும் காணி அபகரிப்பு நடைபெறும் எனத் தெரிந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அக்கறை செலுத்தாமையால் கடந்த செவ்வாய்க்கிழமை செம்மலைப் பகுதியிலுள்ள 120 ஏக்கர் தென்னங்காணி படையினர் வசம் சென்றுவிட்டது. இது குறித்துத் தெரியவருவதாவது, படையினரின் பொதுத் தேவைக்காக காணிகளை அபகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி அளவீடுகள் நடைபெற்று வருகின்றது....
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னறிவிப்புச் செய்துவிட்டே பரவிபாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த புதன் கிழமை அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சரியான நெறிமுறைகளைக் கடைப்பிடித்தே பரவிபாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றார். இது தொடர்பில் சிறீலங்கா இராணுவத்தினரால் எந்தவொரு காவல்நிலையத்திலும்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் பொலிஸார் அசமந்தமாக செயற்படுவதாக எனக்கும் முறைபாடுகள் கிடைத்துள்ளன. இதை நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது' என யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார் யாழ். மாவட்ட சிவில் சமூக கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26)இடம்பெற்றது. இதன் போது மேற்படி விடயத்தினை யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா...
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கில் அமைந்துள்ள தனது காணியை துப்புரவு செய்த வயோதிப பெண், அதிகரித்த வெப்பநிலையால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. பலாலி தெற்கைச் சேர்ந்தவரும் தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமான பற்றிக் பெர்ணான்டோ றீற்றம்மா (வயது 75) என்ற வயோதிப பெண் இவ்வாறு உயிரிழந்தார். காணி...
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டதாகக் கூறப்படும் ஒருவர், நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். இணையத்தளத்தின் ஊடாக அந்நபர், இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பிய போதே, இரகசிய பொலிஸாரினால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்திலிருந்து, வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட, இலங்கைத் தமிழரசுக் கட்சி சேர்ந்த சுப்பிரமணியம் சிவகரனின் கைது உட்பட, இவ்வாறு முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது என...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிறிசிவமூர்த்தி கணபதிபிள்ளையை ஒளிந்திருக்குமாறு நான் சொன்னேன் என்று கூறிய நீர்வேலி முகாமிலிருந்து நகுலனின் வீட்டுக்கு வந்து செல்லும் ரவி, அவன் ஏன் ஒழிந்து இருக்கவில்லை என்றும் கேட்டுள்ளார். நகுலன், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டீ) யாழ்ப்பாணம், நீர்வேலி...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்பட்டு வருவதனால், புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் என்றழைக்கப்படும் ராம் என்பவர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டீ) கடந்த 24ஆம் திகதியன்று...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் அலரிமாளிகையில் நேற்று புதன்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெற்றது. பரவிப்பாஞ்சானிலுள்ள இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் அத்துமீறி நுழைந்தார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மேற்படி சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. "பரவிப்பாஞ்சான்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விசுவமடு, நாயாறு பிரதேசங்களில் இடம்பெறவுள்ள இராணுவத்தின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நேற்று புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'பிடிக்காதே பிடிக்காதே காணிகளைப் பிடிக்காதே', 'அரச அதிகாரிகளே இராணுவ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா தாயக அலுவலகத்தில் நேற்று இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இம்முறை அனைத்து மக்களையும் திரட்டி உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்....
ஊர்காவற்துறை, நாரன்தனே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றில் விழுந்து குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 07 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் ஊர்காவற்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Loading posts...
All posts loaded
No more posts
