Ad Widget

விடுவிக்கப்பட்ட பலாலி பகுதிகளில் சட்டவிரோத கல் அகழ்வு

அண்மையில் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பகுதிகளான பலாலி வடக்கு, பலாலி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத கல் அகழ்வு மற்றும் காட்டுமரங்கள் திருடப்படுவதாக அப்பகுதியில் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

விடுவிக்கப்பட்ட பகுதிகள், பலாலி பொலிஸ் எல்லைக்குட்பட்டதாக காணப்படுகின்றது. பலாலி பொலிஸ் நிலையம் மக்கள் மீளக்குடியமர்ந்தும் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணப்படுவதானால், தாம் பெரிதும் சிரமங்களை எதிர்;கொண்டு வருவதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அப்பகுதியில் பொலிஸ் நிர்வாக நடவடிக்கைகளுக்கான பொறுப்பினை அச்சுவேலி பொலிஸாரே மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதி விடுவிக்கப்பட்ட போதும், இரவு நேரங்களில் பெறுமதியான வேம்பு, பலா போன்ற வீட்டு மரங்கள் வெட்டப்பட்டு எடுத்து செல்வதுடன், வெளிநாடுகளில் வாழந்து வரும் உரிமையாளர்களின் காணிகளில் கனியவள அமைச்சின் அனுமதி இன்றி ஜே.சி.வீ இயந்திரங்கள் மூலம் கல் உடைக்கும் தொழிலினை ஒரு சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பல முறை முறையிட்ட போதும், பொலிஸார் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இப்பகுதியில் பொலிஸாரை ரோந்துக்கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Posts