Ad Widget

வட மாகாண முதலமைச்சரின் அலுவலகம் இன்று முதல் கைதடி பேரவைச் செயலகத்தில்

வட மாகாண முதலமைச்சரின் அலுவலகம் இன்று திங்கட்கிழமை தொடக்கம் கைதடியில் உள்ள பேரவைச் செயலக வளாகத்திற்குள் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் இயங்கவுள்ளது.

வட மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் நேற்று வரை யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கிவந்த முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் அமைச்சிற்குரிய அலுவலகம் என்பன இன்று முதல் கைதடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகங்களிற்காக மாதாந்தம் பெருந்தொகைப் பணம் வாடகையாக செலவு செய்யப்படுகின்றது என எதிர்க்கட்சியினால் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் வட மாகாண சபை உருவாக்கத்தின் மூன்றாண்டு கால இடைவெளிக்குள் முதலமைச்சர் மற்றும் முதலமைச்சரின் கீழ் வரும் அமைச்சுக்கென சொந்தக்கட்டிடம் அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி அலுவலகத்தில் இன்று முதல் முதலமைச்சரின் அலுவலகம் இயங்கவுள்ளதனால் இதுவரை காலமும் அலுவலகமாக இயங்கிய கட்டிடம் அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சரின் அலுவலகம் சொந்தக்கட்டிடத்தில் இயங்குவதன் மூலம் வடமாகாணசபையின் வாடகையாக வெளிச்சென்ற பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

Related Posts